கணிப்பு பொய்த்துப் போகும் அறிகுறி, அச்சம் 

புதுடெல்லி: தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புக்கு பின்னர் வேட்பாளர்களில் சிலர் வெற்றி பெரும் திருப்தியுடனும் சிலர் தோல்வி அடையும் கலக்கத்துடனும் உள்ளனர்.

இக்கணிப்பு பாஜக சார்பாக எடுக்கப்பட்டுள்ளது என்று சிலர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இப்போது இந்தக் கணிப்பும் பொய்யாகும் அறிகுறிகள் தென் படுவதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ள ஊடகங்கள், அந்த கணிப்புகள் பொய்யாகலாம் என்பதற்கான அறிகுறிகள் போல பல முக்கிய நிகழ்வுகள் நடந் துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

அனில் அம்பானி காங்கிரஸ் கட்சி மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்குகளை மீட்டுக் கொள்ள முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுக்குச் சாதகமாக, ஒருதலைபட்சமாக செயல்பட்ட தாகக் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் முன்னாள் அதிபரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை பாராட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் சமாஜ் வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை என சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித் துள்ளது.

அத்துடன் தேர்தலுக்குப் பிந்தைய முடிவுகளுக்கு முன் தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த பங்குச்சந்தை, பாஜக கூட்டணி வெற்றிபெறும் என கணிப்புகள் கூறியதும் உயர் வடையத் தொடங்கியது. ஆனால், நேற்று மீண்டும் பங்குச்சந்தை இறங்குமுகத்தைச் சந்தித்தது.

ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நடை பெற்றபோது போடப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கப் போவதாக சிபிஐ தெரிவித் துள்ளது.

இதுதவிர தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, தனது கருத் துக்கு மதிப்பளிக்கவில்லை என்ப தால் தேர்தல் ஆணையக் கூட்டங் களில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார். நேற்று அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதாக தலை மைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!