ஜெகன்மோகன் ஆதரவை நாட சோனியா திட்டம்

புதுடெல்லி: இன்று வாக்கு எண் ணிக்கை நடைபெற உள்ள நிலையில், காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆந் திர எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆத ரவை எதிர்நோக்கியுள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத் துக்கணிப்பு முடிவுகளால் மிகவும் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஒவ் வொன்றையும் ஒருங்கிணைக் கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவையும் சோனியா கோரியிருப்பதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந் தியை சந்தித்துப் பேசிவருகிறார்.

ஆனால் சோனியாவின் கவ னம் முழுவதும் ஜெகன் மோகன் ரெட்டி மீதுதான் உள்ளது. காரணம், ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குறைந்தது 18 முதல் 20 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 4 முதல் 6 இடங்கள் வரை மட்டுமே வெல்லும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதனால் சோனியா காந்தி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக் கும் பொறுப்பை தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத் பவாரிடம் ஒப்படைத்துள்ள சோனியா, ஜெகன்மோகனை கூட்டணிக்குள் அமர்த்துவது அவரது பொறுப்பு என உறுதியாக சொல்லி விட்ட தாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!