ராகுலா மோடியா: இன்று தெரிந்துவிடும்

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்ற கேள்விகளுக்கு இன்று விடை தெரிந்துவிடும்.

இந்தியாவின் 17வது பொதுத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் இம்மாதம் 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தின் வேலூர் தொகுதி யைத் தவிர மற்ற 542 தொகுதி களுக்கும் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இறுதி முடிவுகள் இன்று நள்ளி ரவோ நாளை அதிகாலையோ தெரிந்துவிடும்.

‘எக்சிட் போல்’ எனப்படும் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் வென்று ஆட்சியமைக் கும் எனக் கூறுகின்றன.

இருந்தாலும், 2004, 2009 பொதுத் தேர்தல் முடிவுகள் இத்த கைய கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கியதால் ‘எக்சிட் போல்’ முடிவுகள் போலியானவை என்றும் எதற்கும் அஞ்சாமல் விழிப்பாகவும் கவனமாகவும் இருங்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தமது கட்சித் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, வாக்கு எண் ணிக்கையின்போது ‘விவிபாட்’ இயந்திரங்களில் பதிவான ஒப்பு கைச்சீட்டை முதலில் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சி களின் கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

இப்படியிருக்க, நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டதால் இன்றைய நாள் தமிழகத்திற்கும் முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது.

குறைந்தது எட்டுத் தொகுதி களில் வென்றால் மட்டுமே ஆளும் அதிமுக அரசு ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற நிலையில், அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று திமுகவும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.

டிடிவி தினகரன் தலைமை யிலான அமமுக கட்சியும் சில தொகுதிகளைக் கைப்பற்றி, அதி முகவை ஆட்சியிலிருந்து அகற்றி விடும் ஆசையுடன் இருக்கிறது.

எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அடுத்துவரும் நாட்களில் இந்திய, தமிழக அரசியல் களங்களில் எதிர் பாராத பல காட்சிகள் அரங்கேறும் என்பதில் சந்தேகமில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!