சுடச் சுடச் செய்திகள்

‘தோல்வியால் பின்வாங்க மாட்டேன்’ 

பெங்களூரு: “யார் என்னை எவ்வளவு கேலி செய்தாலும் சரி, என் நிலையில் இருந்து நான் மாறப் போவதில்லை,” என்று பிரகாஷ்ராஜ் (படம்) கூறியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் பெங்க ளூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், 2.3% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஆனால், இறுதி முடிவுகள் அறி விக்கும் முன்னரே தனது தோல் வியைப் பிரகாஷ்ராஜ் ஒப்புக் கொண்டு டுவிட்டர் பதி விட்டுள்ளார். “இது என் முகத்தில் பளார் என்று விழுந்த அறை. “இன்னும் பெரிய விமர்சனங்கள், கேலி கிண்டல்கள், என்மேல் வைக்கப்படும். ஆனால் நான் என் நிலையிலிருந்து மாறப் போவதில்லை. மதச்சார்பற்ற இந்தி யாவுக்கான எனது போராட்டம் இனியும் தொடரும். நீண்டதூரம் செல்லவேண்டிய கடினமான பயணம் தொடங்கியிருக்கிறது. இதுவரை எனக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்,” என்று பதிவிட்டுள் ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon