வயநாடு: அதிகமான வாக்கு  வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டி யிட்டார். இத்தொகுதியின் அஞ்சல் வாக்குகள் எண்ணப் பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல் காந்தி 8 லட்ச வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருப்பதாக அறிவிக் கப்பட்டது. இறுதியில் அவர் 3 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப் பள்ளி 1 லட்சத்து 64 ஆயிரத்து 69 வாக் குகள் மட்டுமே பெற்று 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள் ளார். அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிரிதி ராணி வெற்றி பெற்றார்.

தமிழகத்திலும் கேரளாவிலும் ஒரு இடத்திலும் கூட பாஜகவால் வெல்ல முடியாதது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 2014-ல் மோடி அலை வீசியது. ஆனால் தமிழகம், கேரளாவில் அந்த அலை எடுபடவில்லை.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon