ராஜஸ்தான், ம.பி., சட்டீஸ்கரில் பாஜக மாபெரும் வெற்றி

மக்களவைத் தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களான சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை இழந்த பாஜக, அதற்குப் பதிலடியாக மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தும் அக்கட்சி மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்­ளது.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேச மாநிலம் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்தது. அங்கு சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.

மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகளிலும் இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டன.

தேர்தல் முடிந்து, நேற்று வாக்கு எண்ண தொடங்கப்பட்டது முதல் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றிருந்தது.

போபால் தொகுதியில் போட்டியிட்ட மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்கூர் முன்னிலை பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

முதல்வர் கமல் நாத்தின் மகன் நகுல்நாத், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நாதன்ஷா கவ்ரேட்டியைக் காட்டிலும் 17 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார்.

இதேபோல ராஜ்கார்க், மோரேனா, திகம்கார்க், இந்தூர், காந்தவா, ரட்லம் ஜபுவா, சித்தி, ஜபல்பூர், மந்தலா உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் அவரின் ஆட்சியை அகற்றி காங்கிரஸ் கட்சி அரியணை ஏறியது.

25 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக மோதிக்கொண்டன. இரு கட்சிகளும் சமபலம் இருந்ததால், இரு கட்சிகளும் சமஅளவு இடங்களைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராத முடிவுகளாக 25 தொகுதிகளிலும் பாஜக முன்னிலைப் பெற்று வருகிறது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைவப் கெலாட் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கஜேந்திர சிங் செகாவைத்தைக் காட்டிலும் 36,569 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இதேபோல பில்வாரா, பாரத்பூர், பிகானிர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட 25 தொகுதிகளிலும் பாஜக தொடர்ந்து முன்னிலையுடன் உள் ளது. ராஜஸ்தானில் பாஜக வேட்பாளர்கள் 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

சட்டீஸ்கர்:

சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்து படுதோல்வி அடைந்தது பாஜக.

இதனால், மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் நடந்த மக்களவைத் தேர்தலில் தற்போது வரை 9 தொகுதிகளில் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது.

இரண்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!