தமிழகத்தில் தலைவர்கள் சறுக்கல்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ள சில முக்கிய பிரபலங்களின் விவரம்:

பொன்.ராதாகிரு‌ஷ்ணனை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த வசந்தகுமார்

கன்னியாகுமரி: மத்திய இணையமைச்சரான பொன்.ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமார் நிறுத்தப்பட்டார். இங்கு போட்டி கடுமையாக இருந்த நிலையில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் படுதோல்வியடைந்தார்.

ஒன்றரை லட்ச வாக்குக்கள் வித்தியாசத்தில் தமிழிசையைத் தோற்கடித்த கனிமொழி

தூத்துக்குடி: பாஜக மாநிலத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு எதிராக நிறுத்தப்பட்டார். தேர்தலுக்கு முன்பே கனிமொழி தான் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப் பட்டது. அதன்படி 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழிசை செளந்தரராஜனைத் தோற்கடித்தார்.

ஹெச்.ராஜாவை ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் தொற்கடித்த கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: பாஜக தேசிய தலைவரான ஹெச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் ஒரு லட்சத்திற்கும் அதிக வாக்குகளுடன் ஹெச்.ராஜாவை தோற்கடித்தார்.

சிபி ராதாகிருஷ்ணனை 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடராஜன்

கோவை: முன்னாள் மத்திய அமைச்சரான சிபி ராதாகிருஷ் ணன் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் முதலில் முன்னிலையை சந்தித்த சிபி ராதாகிருஷ்ணன் அதன்பின் பின்னடைவை சந்தித்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடராஜன் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி: அதிமுக கூட்டணியில் தருமபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செந்தில்குமாரைவிட 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனை 25.000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஓபிஎஸ் மகன்

தமிழக காங்கிரசு முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். மிகவும் போட்டி நிறைந்த பகுதியாக கருதப்பட்ட இத்தொகுதியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகனான ரவீந்தரநாத் குமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தம்பிதுரையை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஜோதிமணி

கரூர் மக்களவைத் தொகுதியில் மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோதிமணி கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!