கமல்: நம்பிக்கை அளித்த மக்கள்

சென்னை: கட்சி தொடங்கி 14 மாதங்களே ஆனபோதும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் ஏறத்தாழ 16 லட்சம் வாக்குகளை, அதாவது 3.7% வாக்குகளைப் பெற்று வியக்க வைத்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் 11 தொகுதி களில் மூன்றாமிடம் பிடித்தது. வடசென்னை, தென்சென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதியில் அக்கட்சியின் வேட் பாளர்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றனர்.

இதனால், விஜயகாந்தின் தேமுதிக சரிவைச் சந்தித்துள்ள நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய இரு கட்சிகளும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுக்கலாம் என்ற நம்பிக் கையை இந்தத் தேர்தல் விதைத் துள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவு கள் குறித்துப் பேசிய கமல்ஹாசன், “14 மாதக் குழந்தையான எங்களை தமிழக மக்கள் எழுந்து நடக்க, ஓடப் பழக்கியுள்ளனர். நேர்வழியில் சென்றால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் கொடுத்துள்ளனர். பணப்புயலுக்கு மத்தியில் இவ்வளவு வாக்குகள் பெற்றதே மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

மற்றவர்கள் சொல்வதுபோல மக்கள் நீதி மய்யம் பாஜகவின் ‘பி’ அணி அல்ல, நேர்மைக்கான ‘ஏ’ அணி என்றார் அவர்.

“பாஜக வெற்றிபெற்ற மாநிலங் களைக் காட்டிலும் தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண் டும்,” என்று பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தினார்.

“ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நாங்கள் எதிர்க்க வில்லை. அவற்றைத் தமிழகத்தில் தான் செயல்படுத்த வேண்டும் என்று சொல்வதைத்தான் நாங்கள் எதிர்ப்போம். விளைநிலங்களுக்கு நடுவில் அது வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு. நாங்கள் புழங்கும் இடத்தில் நீங்கள் அசிங் கப்படுத்துகிறீர்கள் என்பதாகத் தான் அதைப் பார்க்கிறேன்,” என்று கமல் சொன்னார்.

அரசியல் தனது கடமை என்ற அவர், தமிழகத்தின் எழுச்சி என்ற இலக்கை நோக்கிய பயணம் தொடரும் என்றும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!