வைப்புத்தொகை பெறாத அமமுக

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்குப் பெரும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதியில்கூட வைப்புத் தொகை பெறாமல் பெருத்த அவமானத்தைச் சந்தித்தது. 

பரிசுப் பெட்டி சின்னத்தில் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி 21 இடங்களில் மூன்றாமிடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், “மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி-தோல்வி என்பது இயல்பானது,” என்று தினகரன் கூறியுள்ளார்.

அமமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான வெற்றிவேல், பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதியில் ஐந்தாம் இடத்தையே பிடித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon