முதல்வர் பதவிக்குக் காய்நகர்த்தும் ஓபிஎஸ்

சென்னை: சட்டமன்ற இடைத்தேர் தலில் ஒன்பது தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன்மூலம் தமிழ கத்தில் அடுத்த ஈராண்டுகளுக்கு அதிமுகவே ஆட்சியில் நீடிக்கும். 

இந்தச் சோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வென்ற போதும் மக்களவைத் தேர்தலில் அவரது வியூகங்கள் கைகொடுக்க வில்லை. சொந்த ஊரான சேலத் திலேயே அதிமுக வெற்றிபெற முடியவில்லை. அத்துடன், அதி முகவின் கோட்டையாகக் கருதப் படும் கொங்கு மண்டலத்திலும் அதிமுக மொத்தமாகக் கோட்டை விட்டது. மாறாக, தேனி தொகுதி யில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்று, அதிமுக வின் ஒரே ஒரு எம்.பி.யானார்.

இந்த முடிவுகள், சொந்த சமுதாயத்தினரிடமே எடப்பாடி பழனிசாமி மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார் என்பதைக் காட்டு வதாகவும் தமது தலைமையையே மக்கள் விரும்புவதாகவும் கூறி, பாஜகவுக்கு ஓபிஎஸ் தூதுவிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன என்று தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முதல்வர் பதவியை மீண்டும் கைப்பற்ற ஓபிஎஸ் தீவிரமாக முயல்வதாகக் கூறப்படுகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon