முன்னாள் முதல்வர்கள் பலர் தோல்வி

புதுடெல்லி: பெருவெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் முதல்வர்கள்கூட தேர்தலில் தோற்றுப்போயிருப்பது அரசியல் கவனிப்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கோட்டை என்று கூறப்பட்டு வந்த அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றுப்போனார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒன்பது முன்னாள் முதல்வர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

டெல்லியின் முன்னாள் முதல்வர் ‌ஷீலா தீக்‌ஷித், ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா, உத்தரகாண்ட் முன்னாள் முதல் வர் ஹரிஷ் ராவத், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், சு‌ஷில் குமார் ‌ஷிண்டே, கர்நாடக முன்னாள் முதல்வர் எம். வீரப்ப மொய்லி, அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நாபம் துகி, மேகாலய மாநில முன்னாள் முதல்வர் முகுல் சங்மா, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் ஆகிய தலைவர்கள் காங்கிரஸ் சார்பில் 17வது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழு வியவர்கள்.

இந்தத் தேர்தலில் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சியாகும் தகுதியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பலர் பதவி விலக இருப்பதாகவும் இன்று நடைபெற உள்ள அந்தக் கட்சியின் கூட்டத்தில் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளி யாகியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!