சுடச் சுடச் செய்திகள்

ரஜினியின் ஆதரவு கோரும் பாஜக, அதிமுக கூட்டணி

சென்னை:  எதிர்வரும் உள் ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு நடிகர் ரஜினி ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ள தாகக் கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசியல் கட்சி துவங்கி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதே தமது திட்டம் என ரஜினிகாந்த் ஏற் கெனவே திட்டவட்டமாக அறிவித்திருந் தார். எனினும் பல்வேறு கட்சி யினரும் அவரைத் தொடர்ந்து சந்தித்தவண்ணம் இருந்தனர். 

ஆனால் அனைவரையும் சந்தித்த ரஜினி, தேர்தலில் மட்டும் ஆதரிக்க மறுத்துவிட்டார். 

இந்நிலையில் மத்தியில் மீண் டும் பிரதமர் மோடி தலைமை

யிலான ஆட்சி அமைவதால் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ரஜினி கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு தொகு தியை மட்டுமே கைப்பற்றியது தேனி மக்களவைத் தொகு தியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் ஆகக்கூடும் என்று ஆருடங்கள் உலவி வரும் நிலை யில், அவர் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க பாஜக தலைமையி டம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று ரஜினியிடம் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்ததாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. ஆனால் இது மரி யாதை நிமித்தமான சந்திப்பு என்று இருதரப்பிலும் கூறப்படு

கிறது.

உள்ளாட்சித் தேர்தலின் போது பாஜக, அதிமுக கூட்ட ணிக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பார் என்றும் தேர்தலுக்கு முன்பிருந்தே இத்தகைய மரி யாதை நிமித்தமான சந்திப்புகள் அடிக்கடி நிகழும் என்றும் அர சியல் கவனிப்பாளர்கள்  சிலர் கூறுகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் இக் கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும் பட்சத்தில், ரஜினியின் அரசியல் பிரவேசம் உடனுக்குடன் உறுதியாகும். 

ரஜினிக்கு இக்கூட்டணி கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலேயே அடுத்தடுத்த சந்திப்புகள் நிகழும் என்றும் அரசியல் கவனிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon