பதவியேற்பு: இம்ரானுக்கு அழைப்பில்லை

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேவேளையில், அண்டை நாடுகளின் தலைவர்க ளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மோடி மீண்டும் பிரதம ராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், நாளை பதவி யேற்பு விழா நடைபெறுகி றது. இதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பங்ளாதேஷ், இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, பூட்டான், மியன்மர், நேபாளம், கிரிகிஸ்தான்  உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் மூலம் பாகிஸ்தானை இன்னும்கூட இந்தியா அண்டை நாடாகக் கருதவில்லை என்ற எச்சரிக்கையை இந்திய அரசு அந்நாட்டுக்கு உணர்த்தி உள்ளது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். கடந்த 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற போது அதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை ஏற்று அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பங்கேற்றார். பதவியேற்பு நிகழ்வை ஒட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.