ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.   துணை முதல் வர் சச்சின் பைலட்டை உடனடி யாக முதல்வராக நியமிக்க வேண் டும் என அவரது ஆதரவாளர்கள்  போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் இம்மாநிலத்தில் படு தோல்வி கண்டது. 

இதையடுத்து சச்சினை முதல் வராக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் பலர் வெளிப்படையாக கருத்து தெரி வித்து வருகின்றனர்.

சச்சின் பைலட் முதல்வராவார் எனக் கருதி சட்டப்பேரவைத் தேர் தலில் காங்கிரசுக்கு வாக்களித்த இளையர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாக ராஜஸ்தான் காங்கி ரஸ் கமிட்டி செயலர் சு‌ஷில் அசோப்பா டுவிட்டரில் பதிவிட் டுள்ளார்.

இத்தகைய பரபரப்பான சூழ் நிலையில், முதல்வரும், துணை முதல்வரும் நேற்று ராகுல் காந்தியை தனித்தனியே சந்தித்தனர்.