வெடித்தது மீண்டும்  ஒரு சர்ச்சை

தேனி: தேர்தல் முடிவுகள் வெளியா வதற்கு முன்பே தேனி பகுதியின் கோயில் கல்வெட்டு ஒன்றில் ‘நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்’ என்று பொறிக்கப்பட்டிருந்தது ஊடகங்களில் வெளியாகி சர்ச் சையைக் கிளப்பியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இப் போது சுவரொட்டியில் அச்சடிக்கப் பட்டுள்ள வாசகங்களால் புது பிரச்சினை வெடித்துள்ளது.

தேனியில் பிரபல வேட்பாளர் களான அமமுகவின் தங்கத் தமிழ்ச்செல்வன், காங்கிரசின் ஈவி கேஎஸ் இளங்கோவன் ஆகி யோரை எதிர்த்து புது வேட்பாள ராகக் களமிறங்கினார் ரவீந்திர நாத். இவர் தமிழக துணை முதல் வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன்.

தமிழகத்தில் வேலூரைத் தவிர்த்து நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுகவும் ஒரு தொகுதியில் அதிமுகவும் வென் றன. இந்த ஒரு தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றிகண்டார்.

இந்நிலையில், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பாகவே அதாவது போன 16ஆம் தேதியே சின்ன மனூர் அருகே குச்சனூரில் வைக் கப்பட்ட கோயில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அது எப்படி வாக்குகளை எண்ணா மலேயே நாடாளுமன்ற உறுப்பினர் என்று பெயர் பொறிக்கலாம் என சர்ச்சை வெடித்தது.

அந்த கல்வெட்டில் குறிப்பிட்டது போலவே அவர் எம்.பி. ஆனார்.

எதிர்க்கட்சியினரும் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதன்பிறகு இந்த கல்வெட்டின் மீது புதிய கல் வெட்டு வைத்து மறைக்கப்பட்டது.

இதையடுத்து அடுத்த சர்ச்சை இப்போது ஆரம்பமாகி உள்ளது.

ரவீந்திரநாத் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தேனி நகர் முழுவதும் அதிமுகவினர் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகளில் ‘எங்கள் மத்திய அமைச்சரே’ என்று ப. ரவீந்திரநாத்குமார் பெயர் இடம்பெற்றுள்ளது.

வாக்கு போட்டவர்களுக்கு நன்றி சொல்வதற்காக அடிக்கப் பட்ட சுவரொட்டி அது. இது சமூக ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பேசப்படும் கதையாகி உள்ளது.

இதற்கிடையே, மதுரை மாவட் டம் உசிலம்பட்டி அருகே அய்ய னார் குளம் ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழிலும் ரவீந்திரநாத் குமார் பெயருக்கு அருகில் மத்திய அமைச்சர் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் குறித்து உசிலம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2019-05-30 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!