பாஜக மறுப்பு: கமலுக்கு அழைப்பில்லை

சென்னை: இன்று நடக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை வர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளி யான செய்தியில் உண்மையில்லை என்று பாஜக மறுத்துள்ளது.

“இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந் துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினியும் விழாவில் கலந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி எது வும் அழைப்பு விடுக்கவில்லை,” என்று பாஜக கூறியுள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் தனது டுவிட்டர் பதி வில், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தியைப் பரப்பி யது யார் என கேள்வி எழுப்பி யுள்ளார். 

இந்தக் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, அதிபர் மாளிகையில் இருந்து தொலைபேசி வாயிலாக  கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக் கப்பட்டதாகத் தெரிவித்தது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்