ஆந்திர முதல்வரானார் ஜெகன்மோகன்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, 46, நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

நண்பகல் 12.23 மணிக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங் களின் ஆளுநர் நரசிம்மன் திரு ஜெகன்மோகனுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்றத் தேர் தலில் மொத்தமுள்ள 175 இடங் களில் 151 இடங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. அதனோடு, 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22 தொகுதிகளை யும் அக்கட்சி தனதாக்கியது.

பதவியேற்பு விழாவில் தெலுங் கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்காக விஜயவாடாவில் சிறப்பான ஏற்பா டுகள் செய்யப்பட்டிருந்தன. திறந்த வெளியில் நடந்த இந்நிகழ்ச்சியில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

முதல்வராகப் பதவியேற்றபின் பேசிய ஜெகன்மோகன், “உங்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, உங்களது கனவுகளை நனவாக்கு வேன் என மாநில முதல்வராக நான் உறுதிகூறுகிறேன்,” என்றார். 

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இரண்டு பக்கத் தேர்தல் அறிக்கை யையே வெளியிட்டிருந்தது.

“தேர்தல் அறிக்கையை பகவத் கீதை, திருக்குர் ஆன், பைபிள் போல நான் கருதுகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதுவே எனது வழிகாட்டி விளக்காகத் திகழும்,” என்றார் ஜெகன்.

முதியோருக்கான ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பதே தனது முதல் கையெழுத்தாக இருக்கும் என்ற அவர், இப்போது ஆயிரம் ரூபாயாக இருக்கும் அத்தொகை இவ்வாண்டு ரூ.2,250 ஆகவும் மூவாண்டுகளில் ரூ.3,000ஆகவும் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

சாதி, இன, அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து மக்களையும் சென்றடைய அரசாங்கம் விரும்பு வதாகக் கூறிய அவர், அதற்காக  400,000 கிராமத் தொண்டூழியர்கள்  வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்படுவர் என்றார். 50 குடும்பங்களுக்கு ஒரு தொண்டூழி யர் நியமிக்கப்படுவார் என்றும் அவர்களுக்கு ரூ.5,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரி வித்தார்.

ஓராண்டுக்குள் மேல்நிலையில் இருந்து கீழ்மட்டம் வரை அரசு நிர்வாகம் சீரமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, ஆந்திராவின் புதிய  அமைச்சரவை ஜூன் 6ஆம் தேதி பதவியேற்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்