டெல்லியில் மகனுடன் துணை முதல்வர் முகாம்

புதுடெல்லி: டெல்லியில் அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைவர்கள் பல ரும் தமிழகம் திரும்பிய நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல் வமும் அவரது மகன் ரவீந்திரநாத் குமாரும் மட்டும் இன்னும் டெல்லி யிலேயே முகாமிட்டுள்ளனர். 

முதல்வர் பழனிசாமி, தம்பி துரை உள்ளிட்டோர் சென்னை திரும்பிய நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது எப்படியா வது அமைச்சர் பதவியை தனது மகனுக்குப் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்ற வைராக்கியத் தோடு ஓபிஎஸ் டெல்லியிலேயே தவமாய் தவம் கிடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மகனின் பதவி குறித்து  பாஜக தலைமையுடன் மீண்டும் அவர் பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஒரேவொரு தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. அது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேனி தொகுதி.

இதனால் தன் மகனுக்கு எப் படியும் மத்திய அமைச்சர் அல்லது இணையமைச்சர் பதவி கிடைத்து விடும் என ஓபிஎஸ் நம்பிக்கொண் டிருந்தார். 

தேர்தலுக்கு முன்பே மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக் கும் என ஓபிஎஸ் கூறிவந்ததாக வும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் துணை முதல்வர்  முயற்சியின் மறுபக்கத்தில் முதல் வர் பழனிசாமி தரப்பில் இருந்து மேலவை உறுப்பினரான வைத்தி லிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கப்பட்டுள்ளது. 

ஓபிஎஸ் தரப்பில் ரவீந்திரநாத் பெயரும் இபிஎஸ் தரப்பில் வைத்தி லிங்கம் பெயரும் பரிந்துரை செய்து, இந்த இருவரில் யாருக் காவது ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என கடைசி நிமிடம் வரை நம்பிக்கை யுடன் இருந்துள்ளனர். ஆனால் கடைசிவரை இருவரில் ஒருவரை கூட பிரதமர் அழைக்கவில்லை.

இதுகுறித்துப் பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், “இது பிரதம ரின் முடிவு. வைத்திலிங்கம் அழைக்கப்படுவார் என நாங்கள் நம்பினோம். ஆனால் அவ்வாறு செய்தால் அதிமுகவிற்கு பிரச் சினை ஏற்படும் என்பதால் யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. 

“இபிஎஸ், ஓபிஎஸ் இவர்களில் யாருக்குச் சாதகமாக முடிவு எடுத்தாலும் அது அதிமுகவில் பிளவை ஏற்படுத்தும். இது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதக மாக அமைந்துவிடும் என பாஜக கணக்குப் போட்டதாலேயே தமிழ கத்தில் யாருக்கும் மத்திய அமைச் சர் பதவி வழங்கப்படவில்லை,” என தெரிவித்துள்ளார்.