பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் எனக் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட எண் ணப்பட்ட வாக்குகளின் எண் ணிக்கை அதிகம் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு பாஜக இரண்டாவது முறை யாக ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், நாடு முழுவதும் 370 தொகுதிகளில் பதிவான வாக்கு களைவிட, எண்ணப்பட்ட வாக்கு கள் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்துக்குத் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் 11,94,440 வாக்குகள் பதிவாகி யிருந்தன. ஆனால், 12,12,311 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளைவிட, 17,871 வாக்குகள் அதிகமாக எண்ணப் பட்டுள்ளன.

இதுகுறித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி நாயுடு, “அரசியல் கட்சி முகவர்களிடம் எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளன என்பதைச் சொல்லி விட்டுத்தான், தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைப்பார்கள். பதிவான வாக்குகளைவிட, அதிக வாக்குகள் இருந்தால் அரசியல் கட்சிகள் அப்போதே பிரச்சினை செய்திருப்பார்கள்.

“இந்தத் தேர்தலில், வாக்குப் பதிவு விவரங்களைக் கைபேசி செயலி மூலம் பதிவுசெய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

“பல இடங்களில், அவர்கள் அச்செயலியைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுதான், வித்தியாசத்துக்குக் காரணம். மற்றபடி, தவறு நடக்க வாய்ப் பில்லை,” என்றார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி, “இதற்கான விளக் கத்தைத் தேர்தல் ஆணையம்தான் வழங்க வேண்டும்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!