உள்ளாட்சித் தேர்தல்: மகத்தான வெற்றியால் காங்கிரஸ் மகிழ்ச்சி

பெங்களூரு: நாடாளுமன்றத் தேர் தலில் கர்நாடக காங்கிரசைப் பின் னுக்குத் தள்ளிய பாஜக, அம்மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் காங் கிரஸ் = மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு நடை பெறுகிறது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அங்கு மொத்தம் இருக்கும் 28 நாடாளு மன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மஜத, தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன.

ஆனால் பாஜகவோ 25 இடங் களைக் கைப்பற்றியது. பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் ஓரிடத்தில் வென்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல் வியைத் தொடர்ந்து மாநில பாஜக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏக்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாகப் புகார் கூறப் பட்டது. மேலும் மஜத, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள தாகவும் பேசப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கர்நாடகாவில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது.

இதன் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், நகர்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு தேர்தலில் மொத்தமுள்ள 1,221 வார்டுகளில் காங்கிரஸ் 509 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக வெறும் 336 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. மதச்சார் பற்ற ஜனதாதளம் 174 வார்டுகளில் வென்றது. 160 வார்டுகளில் சுயேச் சைகளும் பிஎஸ்பி 3 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங் களிலும் வென்றுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த மாபெரும் தோல்விக்குப் பிறகு பெற்றுள்ள இந்த மகத்தான வெற்றியால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கர்நாடக மாநிலம் சட்டசபை, நாடாளுமன்றம், உள்ளாட்சி எனக் கடந்த ஓராண்டில் பல்வேறு நிலை தேர்தல்களைச் சந்தித்து உள்ளது.

அவற்றில், வாக்காளர்கள் தங் கள் தேவைகளின் அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு கட்சி வேட்பாளர்களைத் தேர்ந் தெடுப்பது இப்போது தெளிவாகி யுள்ளது.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக 104 இடங்களைப் வென்றா லும் 80 இடங்களை வென்ற காங் கிரஸ் 37 தொகுதிகளை வென்ற மஜத கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.

ஆனால், கர்நாடக மாநில காங் கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், “காங்கிரஸ் 42 விழுக்காடு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

“அப்படியானால் மக்களவைத் தேர்தலில் பாஜக எப்படி வென்று இருக்க முடியும்,” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!