சுடச் சுடச் செய்திகள்

பீகார் தேசிய ஜனநாயக கூட்டணியில் கருத்து வேறுபாடு

பாட்னா: பீகார் மாநில தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் விழத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் அம்மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய் யப்பட்ட போது தங்களுக்கு ஒதுக் கப்பட்ட அமைச்சர் பதவியை ஏற்க பாஜக மறுத்துவிட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட் டது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம். இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 33 இடங்களை இக்கூட்டணி கைப் பற்றியது. 

எனினும் மத்திய அமைச்சரவை யில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பங்கேற்கவில்லை. அக்கட்சிக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது பாஜகவுக்கு கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியை வழங்க முதல்வர் நிதிஷ்குமார் முன்வந்தார். ஆனால் பாஜக அதை ஏற்க வில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் புதிய அமைச்சர்கள் பதவியேற்ற னர். இத்தகைய பரபரப்பான சூழ் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவித விரிசலும் இல்லை என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

“காலியாக இருந்த அமைச்சர் பதவிகள் எங்கள் கட்சியினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. அதே போல் மேலும் சில இடங்கள் பாஜக உறுப்பினர்களால் உரிய நேரத்தில் நிரப்பப்படும்,” என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்ட ணியில் குழப்பம் இல்லை என அதில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

ஏதேனும் உரசல்கள் இருப்பின் அதை சரிசெய்யும் பணியை தம்மால் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தலைவர் கள் இவ்வாறு கூறினாலும் கூட்ட ணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதா கவே ஊடகங்கள் கூறுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon