சுடச் சுடச் செய்திகள்

மக்களவை தேர்தலில் தேறாத 610 கட்சிகள்

புதுடெல்லி: மக்களவைத் தேர்த லில் நாடு முழுவதும் 610 கட்சி கள் ஓரிடத்தில்கூட வெற்றிபெற வில்லை. 530 கட்சிகள் பெற்ற வாக்குகள் பூஜ்யம் விழுக்காட்டுக் கும் கீழ். தேர்தல் ஆணையத்திடம் பெறப்பட்ட தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

மொத்தமுள்ள 543 மக்க ளவைத் தொகுதிகளில் தமிழ்நாட் டின் வேலூர் தவிர 542 தொகு திகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சிறியதும் பெரியதுமாக ஏராள மான கட்சிகள் போட்டியிட்டன. 13 கட்சிகள் ஓரிடத்தில் மட்டும் வென்று நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்றன.

ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத கட்சிகளுள் ஃபார்வர்ட் பிளாக், இந்திய தேசிய லோக் தளம், ஜன்நாயக் ஜனதா கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி, ராஷ்டிரிய சமதா கட்சி, சர்வ ஜனதா கட்சி, ஜம்மு, காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, அனைத்திந்திய என் ஆர் காங் கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற முன்னணிக் கட்சிகள் உள்ளடங் கும்.

இப்படி படுதோல்வியடைந்த 610 கட்சிகளில் 80 கட்சிகள் மட்டும் தலா ஒரு விழுக்காடு வாக்குகளைப் பெற்றன. எஞ்சிய 530 கட்சிகளுக்கும் பூஜ்யம் விழுக்காட்டுக்கும் கீழான வாக்கு களே கிடைத்தன.

இம்முறை 37 அரசியல் கட்சி கள் நாடாளுமன்றத்திற்குள் நுழை கின்றன. இவற்றில் பாஜக மட்டும் 303 உறுப்பினர்களுடன் மக் களவைக்குச் செல்கிறது.

பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங் கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய ஆறு தேசிய கட்சிகள் மட்டும் 375 தொகுதிகளில் வென்றுள் ளன. 2014 தேர்தலில் இந்த எண் ணிக்கை 342  ஆக இருந்தது.  

ஒரு தொகுதியில் வென்ற கட்சிகளுள் அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் மாணவர் ஐக்கிய கட்சி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரள காங் கிரஸ் (எம்), மிஸே„ தேசிய முன் னணி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை அடங்கும்.

2014ஆம் ஆண்டு மக்க ளவைத் தேர்தலின்போது போட்டி யிட்ட 464 கட்சிகளுள் 38 கட்சி கள் மட்டுமே வெற்றி பெற்றன. அவற்றுள் 12 கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வென்றன. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon