உணவைத் தாளிப்பதின் அவசியம்

உணவைச் சமைத்துச் சாப்பிடும் போது அதில் ஏற்படும் மாறுபாடு களால் செரிமானக் கோளாறு ஏற்படலாம். அதனைத் தவிர்க்கும் நோக் கில்தான், சமைக்கும்போது உண வின் சுவைக்கு ஏற்பவும் அதன் குணத்திற்கு ஏற்பவும் தாளிப்பது என்ற பெயரில் சில நறுமணப் பொருள்களைச் சேர்க்கும் வழக் கம் ஏற்பட்டது. 

அதற்காக ஏலக்காய், மஞ்சள், கடுகு, சீரகம், பெருங்காயம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மிளகு உள்ளிட்ட பொருட்களைக் குறிப் பிடத்தக்க விதத்தில் சேர்க்கிறோம். இவற்றால் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமச்சீராகும். 

மேற்கண்ட நறுமணப் பொருள் கள் அனைத்தும் சிறிது கார சுவை உடையவை. செரிமானத்தை எளிதாக்குவதுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நுண் கொல்லிகளையும் அழிக்கும். உணவில் உள்ள நஞ்சுத்தன்மையை நீக்கும்.

இனிப்பு உணவுகளைச் சமைக் கும்போது நெய் சேர்க்கிறோம். அது சிலருக்குச் செரிமானக் கோளாற்றை உண்டாகும். மேலும் இனிப்புச் சுவை கப தன்மையை அதிகப்படுத்தும்.
ஏலக்காய், கிராம்பு, லவங்கப் பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி, குங்குமப்பூ போன்ற ஏதாவது ஒரு சில நறுமணப்பொருட்களை அந்த உணவில் அதன் சுவைக்கு ஏற்ப சேர்த்தால், கப தன்மைக் குறையும். முக்கியமாக ரத்தத்தில் சர்க் கரையைச் சற்றுத் தாமதமாக கலக்கச் செய்யும்.

ஏலக்காய் மற்றும் சாதிக்காயில் உள்ள நறுமண வேதிப்பொருட்கள் குடல் புண்களை ஆற்றும் சக்தி வாய்ந்தவை.அசைவ உணவு சமைக்கும் போது பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் இவற்றைக் கலந்து சமைப்பது மிகச்சிறந்த முறை. மிளகு சிறந்த கிருமி நாசினி. உணவில் உள்ள நச்சுக்களை நீக்கும் சக்தி மிளகிற்கு உண்டு. பூண்டு, இதயத்திற்கு மிக சிறந்த உணவு. ரத்தத்தில் கொழுப்பை சேரவிடாமல் காக்கும்.

பருப்பு, வாழைக்காய், உருளைக் கிழங்கு, சுண்டல் போன்ற வற்றைத் தயார் செய்யும்போது மிளகு, சீரகம், இஞ்சி, பெருங் காயம் போன்றவற்றை சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அவை உணவிற்குத் தனி ருசியை அளிப்பதுடன் உடலில் ஏற்படும் வலியையும் குறைக்கும்.
ரசம் இரைப்பையில் உள்ள செரிமானத்திற்கான நீரினைச் சுரக்கச்செய்து செரிமானத்தை எளிதாக்கி வாத, பித்த, கபத்தைச் சமநிலைப்படுத்துகிறது. 
குழம்பு, சாம்பார் வகைகளைத் தயார் செய்யும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்க்கவேண்டும். வெந்தயம் கசப்புச் சுவை உடையது. புளிப் பால் உண்டாகும் வாதத்தைக் குறைக்கும். பித்தத்தைத் தணிக்கும். நார்ச்சத்து நிறைந்த மருத்துவ உணவு இது.