அதிக எண்ணெய் ஆபத்து

இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவை உணவில் 'கொஞ்சம் தூக்கலாக' இருந்தால் உடல் நலத்துக்குக் கேடு என்பதைப் பலர் தற்போது உணர்ந்திருப்பதைப்போல, அந்த விதி எண்ணெய்க்கும் பொருந்தும் என்பதை உணர வேண்டும். அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் கொழுப்பின் அளவு கூடுதல், ரத்தக் குழாய் அடைப்பு, இதய நோய், உடல் பருமன் அதிகரிப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண் ணெய், ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற வற்றுடன் தற்போது காய்கறிகளி லிருந்து பெறப்படும் எண்ணெய் யும் சமையலுக்குப் பயன்படுத்தப் படுகிறது.

எந்த எண்ணெய்யாக இருந் தாலும் 'தாராள' மனப்பான்மை யைக் கைவிட்டு, சமையலுக்கு இரண்டு முதல் 3 தேக்கரண்டிக்கு மிகாமல் எண்ணெய்யைப் பயன் படுத்தலாம். எண்ணெய்களில் பெரும்பாலும் 'வைட்டமின் ஈ', கொழுப்புச் சத்துகள் மிகுந்திருக்கும். ஆனால் ஒவ்வோர் எண்ணெய்க்கும் தனித்தன்மை உண்டு. அதனைக் கருத்தில்கொண்டு எண்ணெய் களைத் தேர்ந்தெடுத்துப் பயன் படுத்தலாம். ஆலிவ் எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சூடுபடுத்தினால் ஆலிவ் எண் ணெய்யின் தன்மை மாறிவிடுவ தாகக் கூறப்படுகிறது.

எனவே, சாலட் போன்ற சூடேற்றாத பயன் பாடுகளுக்கு ஆலிவ் எண் ணெய் உகந்தது. சூரியகாந்தி எண்ணெய்யில் ‘வைட்டமின் ஈ‘ நிறைந்துள்ளது. அதிக வெப்பத்திலும் சூரிய காந்தி எண்ணெய்யின் சத்துகள் பெரும் மாற்றம் அடைவதில்லை. அதனால், பொரிப்பதற்கு பெரும்பாலும் சூரியகாந்தி எண்ணெய் பயன் படுத்தப்படுகிறது. இருப்பினும் பொரித்த உணவுகளை அளவுடன் சாப்பிடுவது நலம். கடலை எண்ணெய்யிலும் குறைவான அளவே கெட்ட கொழுப்பு இருப்பதாகச் சொல் லப்படுகிறது. இதனை பெரும் பாலும் பொரிப்பதற்குப் பய ன்படுத்துகிறார்கள்.

தேங்காய் எண்ணெய்யில் 90% கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நல்ல கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் என்று கூறப் படுகிறது. எண்ணெய்யில் உடலுக்குத் தேவையான சத்துகள் இருந்தா லும் குறைந்த அளவில் அத னைப் பயன்படுத்துவதற்குப் பழகிக் கொள்வது அவசியம். தற்போது கடைகளில் பரவலா கக் கிடைக்கும் செக்கு எண்ணெய் களைப் பயன்படுத்தினால் அவற் றின் சத்துகளை முழுமையாகப் பெற வாய்ப்புள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!