இதயத்தைக் காக்கும் சில உணவு வகைகள்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுப்பொருட்களை உட்கொள்வதன் மூலம் இதய நோய்கள் வருவதையோ அல்லது அதன் தாக்கத்தையோ குறைக்க முயற்சி செய்யலாம். அத்தகைய சில உணவுப் பொருட்களை இங்கு காண்போம்:

ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட சத்தான கடலை வகைகள் இதயத்துக்கு வலு சேர்க்கும். 

ஸ்ட்ராபெர்ரி, அவரிநெல்லி, குருதிநெல்லி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளை சாப்பிடலாம். 

ஆளி விதைகள் (linum) இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அவற்றை அரைத்தோ, வேக வைத்தோ, ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுவகைகளைச் சமைக்கும்போது சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம். 

தட்டைப்பயிறு, ராஜ்மா உள்ளிட்ட பீன்ஸ் வகைகளில் நார்ச்சத்து, வைட்டமின் பி, மின ரல் போன்ற சத்துகள் அதிகம் உள்ளதால் அவை இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. 

கேரட், சர்க்கரைவள்ளிக் கிழக்கு, சிவப்பு மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் இத யத்தை வலுப்படுத்துகின்றன. 

கீரை வகைகள் பொதுவாகவே ஆரோக்கியமானவை. அவற்றை சாலட்களாக சாப்பிடலாம். 

ஆரஞ்சு, பப்பாளி, பரங்கி போன்ற பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது

தக்காளிப் பழத்தில் இதயத்தை பாதுகாக்கும் சக்திகள் நிறைந்துள்ளன. உணவில் அதிக அளவு தக்காளி சேர்த்துக் கொள்வதும் இதயத்தைப் பாதுகாக்கும். கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத உணவு வகைகள் நல்லது.