தீபாவளியின்போது ஆரோக்கியத்திலும் ஒரு கண் இருக்கட்டும்!

⦁    மகிழ்ச்சியான சூழலில் இருக்கும்போது என்னதான் உட்கொள்கிறோம் என்பதே நமக்கு மறந்துவிடும். பலகாரங்களை சாப்பிடுங்கள் ஆனால் அளவோடு சாப்பிடுங்கள். விதவிதமான பலகாரங்கள் கண் முன் இருந்தாலும் அவற்றை குறிப்பிட்ட சிலவற்றை ஒதுக்கி சாப்பிட முனையுங்கள்

படம்: மிஷலின் கயிட்
படம்: மிஷலின் கயிட்

⦁    குடும்பத்தினருக்கும் நெருங்கியவர்களுக்கும் உணவு பொருட்களை அன்பளிப்பாக வழங்கும்போது, அதில் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஆரோக்கிய தெரிவு முத்திரை உள்ளதா என்பதை கவனியுங்கள்.

படம்: கிவ் கிவ்ட்ஸ் பூதிக்
படம்: கிவ் கிவ்ட்ஸ் பூதிக்

⦁    வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு பலகாரங்கள் கொடுப்பதற்கு அப்பால் பழ வகைகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

படம்: தி டேலி மீல்
படம்: தி டேலி மீல்

⦁    விருந்தினர்களுக்கு பானங்களை தெரிவு செய்யும்போது, ஆரோக்கிய தெரிவு முத்திரைக் கொண்ட குறைந்த சக்கரை கொண்ட ‘பேக்கெட்’ பானங்களை தேர்ந்தெடுக்கவும்.

படம்: dei.com.sg
படம்: dei.com.sg

⦁    கோழி வகைகளை சமைப்பது வழக்கம் என்றாலும் அதனை ஆரோக்கியமாக சமைக்கலாமே? கோழியைப் பொறிப்பதற்கு பதிலாக வெவ்வேறு விதமாக சமைக்கலாம். 'தண்டூரி' பாணியில் சமைக்கலாம், கோழியை 'பேக்' செய்யலாம், கோழியின் தோலையும் நீக்கி சமைக்கலாம்!

படம்: ஸ்பயிஸ் ஆர்ட்
படம்: ஸ்பயிஸ் ஆர்ட்

⦁     நான்கு, ஐந்து வீட்டுகளுக்கு செல்ல புறப்பட்டு விட்டீர்கள். சாப்பிட உணவுக்கு ஏற்றவாறு சற்று உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லவா? செல்ல வேண்டிய இடத்திற்கு வாகனத்தை சற்று தள்ளியே நிறுத்திவிட்டு சற்று தூரம் நடக்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால் மின்தூக்கிக்கு பதிலாக பதிகட்டில் ஏறி விருந்தினருக்கு வீட்டுக்குச் செல்லுங்கள்.  

படம்: அடுக்குமாடி வீடு படிகட்டு
படம்: அடுக்குமாடி வீடு படிகட்டு

குறிப்புகளை வழங்கியவர்: சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் மூத்த ‘ஸ்தாவ்’ தாதி திருமதி அ.மகேஸ்வரி