இளையரின் சமையல்: காஷ்மீர் குங்குமப்பூ அரிசி பாயசம்

இன்றைய இளையர்களில் பலர் சமையல் கலையை வளர்த்துக்கொள்ளவும் அன்புக்குரியவர்களின் பிறந்தநாள், திருவிழா போன்ற சமயங்களில் அவற்றைச் செய்து உற்றாரை மகிழ்விக்கவும் செய்கின்றனர்.

ஸ்விஸ் காட்டேஜ் உயர் நிலை பள்ளியின் உயர்நிலை 3ல் பயிலும் ஸ்ம்ருதா சுரேஷ் தன் தந்தையின் பிறந்தநாளுக்கு காஷ்மீர் குங்குமப்பூ அரிசி பாயசம் செய்து கொடுத்திருக்கிறார்.

அதன் செய்முறை மிக எளிது எனக் குறிப்பிடும் அவர், அதன் செய்முறையை தமிழ் முரசு வாசகர்களுக்காகப் பகிர்ந்துள்ளார்.

காசி அண்ணப்பூரணி கோவிலின்  முக்கியமான பிரசாதம் எனக் குறிப்பிடும் அவர், தீபாவளி நாளில் வட இந்தியாவின் பல வீடுகளிலும் இது மணக்கும் என்றார்..
 

தேவையான  பொருட்கள்:

பாசுமதி அரிசி - 150கிராம்
பால் -  1லிட்டர்
'கண்டன்ஸ்ட்' பால் -1 டின்
குங்குமப்பூ - 0.5 கிராம்.
நெய் -100கிராம்.
முந்திரி - 100 கிராம்
திராட்சை - 50 கிராம்
பாதம் பருப்பு - 6

செய்முறை.

அரிசியைக் கழுவி 400 மி.லி. தண்ணீரில் நன்றாக வேகவிடவும்.

மற்றொரு அடுப்பில் பாலை நன்றாக கொதிக்க விடவும்.

அரிசி நன்கு குழைந்த பிறகு அதனை பாலில் சேர்த்து 10 நிமிடத்துக்குக் கொதிக்க வைக்கவும்.

அந்தக் கலவையுடன் குங்குமப்பூ வை சேர்க்கவும்.

உடனே, 'கண்டன்ஸ்ட்' பாலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.

பாதம் பருப்பை சீவி, பாயசத்தில் தூவவும்.

சுவையான காஷ்மீர் அரிசி பாயசம் தயார். சூடாகவோ அல்லது குளிரவைத்து சில்லெனவோ பரிமாறலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!