சர்வினின் சொல்வளம் பெருக்கிய செய்தித்தாட்கள்

தொடக்­க­நிலை இறுதி ஆண்டுத் தேர்­வு­களில் நண்­பர்­களை­வி­டப் பின்­தங்­கிய நிலையில் மனம் தளர்ந்­து­போன சர்வின் ராஜ் ரகு­பா­லன், 16, பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்­வு­களில் சிறப்­புத் தேர்ச்­சி பெற்றார். மருத்­துவம் பயி­ல­வேண்­டும் என்ற தமது எதிர்­கால இலக்கை நோக்கி முன்னேறி இருக்­கிறார் சர்வின். சாதாரண நிலைத் தேர்­வு­களில் 12 புள்­ளி­களைப் பெற்ற உட்­லண்ட்ஸ் உயர்­நிலைப் பள்ளி மாண­வ­ரான சர்வின், தொடக்­கக் கல்­லூ­ரிக்­குச் சென்று அறி­வி­யல் பாடங்களைப் பயி­ல­வி­ருக்­கிறார்.

தேர்­வு­களில் சிறந்த தேர்ச்­சியைப் பெற்று கல்­வி­யில் சாதிக்க பல தியா­கங்களைச் செய்­த­தா­கச் சொன்ன அவர், “தொலைக்­காட்சி பார்ப்­பது, கணினியில் விளை­யா­டு­வது, வெளியே சென்று நண்­பர்­க­ளோடு நேரம் கழிப்­பது போன்ற­வற்­றில் ஈடு­படு­வதை நிறுத்­திக்­கொண்டு படிப்­பில் கவனம் செலுத்­தி­னேன்,” என்றார். எளிய குடும்பப் பின்ன ணியைக் கொண்ட சர்வின், துணைப்­பாட வகுப்­பு­களுக்­குச் செல்­லா­மல் சொந்த­மா­கவே படித்து வெற்றி பெற்­றுள்­ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்

18 Mar 2019

முழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி