தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் மாணவர்கள், நிபுணர்கள் ஆகியோரின் ஆய்வுக்கு உதவும் S.U.R.E.

கௌரி சந்திரா

­­­­­­­­­இன்றைய சூழலில் தொழில்­­­நுட்­­ப முன்­­­னேற்­­­றங்க­­­ளால் நம்மால் வெவ்வேறு தக­­­வல்­­­களை இடம், நேரக் கட்­­­டுப்­­­பாடு இன்றி உட­­­னுக்­­­கு­­­டன் அறிந்­­­து­­­கொள்ள முடி­­­கிறது. பலவிதமான தக­­­வல்­­­களும் செய்­­­தி­­­களும் இணையம், சமூக ஊட­­­கங்கள் வாயிலாக பரப்பப்­­­படு­­­கின்றன. ஆனால் நாம் படிப்­­­பது அனைத்­­­தும் மெய்யா? அனை­­­வ­­­ரா­­­லும் இணை­­­யத்­­­தி­­­லும் சமூக ஊடகங்களி­­­லும் எழுத முடி­­­வ­­­தால் எவ்வாறு உண்மை­யான தக­வல்­களை அடை­­­யா­­­ளம் காண்பது? பொய்­­­யி­­­லி­­­ருந்து உண்மையை­­­யும் சந்­­­தே­­­கத்­­­திற்கு உட்­­­பட்­­­ட­ வற்­­­றி­­­லி­­­ருந்து பய­­­னுள்­­­ள­­­வற்றை­­­யும் கேள்­­­விக்­­­கு­­­ரி­­­ய­­­வற்­­­றி­­­லி­­­ருந்து நம்ப­­­க­­­மா­­­ன­­­வற்றை­­­யும் நாம் தேடி எடுக்கவேண்டும். அதற்கு நமக்கு உதவி­க­ர­மாக இருக்­கிறது தேசிய நூலக வாரி­­­யத்­­­தின் S.U.R.E திட்டம். S.U.R.E என்ற வார்த்தை­­­யின் உள்­­­ள­­­டக்­­­கம் மூலா­­­தா­­­ரம் (So­­­u­­­r­­­ce), புரிந்­­­து­­­ணர்வு (Un­­­d­­­e­­­r­­­s­­­t­­­a­­­nd), ஆராய்ச்சி (Re­­­s­­­e­­­a­­­r­­­ch), மதிப்­­­பீடு (Ev­­­a­­­l­­­u­­­a­­­te).

இந்த நான்கு அணு­கு­முறை­களின் மூலம் நமக்­­­குக் கிடைக்­­­கும் தக­­­வல்­­­களின் உண்மைத் தன்மையை அறிய முடியும். தக­­­வல்­­­களைத் தேடுவது, பகுத்­­­த­­­றி­­­வது ஆகியவற்றின் முக்­­­கி­­­யத்­­­து­­­வத்தை எடுத்­­­துரைக்க S.U.R.E திட்டத்தை தேசிய நூலக வாரியம் 2013ஆம் ஆண்டில் ஆரம்­­­பித்­­­தது. இத்­­­திட்­­­டத்­­­தின் வாயிலாக மக்­­­களுக்­­­குத் தகவல் சார்ந்த பகுத்­­­த­­­றிவு திறன்களைக் கற்­­­பிப்­­­பதே தேசிய நூலக வாரி­­­யத்­­­தின் நோக்­­­க­­­ம். அமெ­­­ரிக்­­­காவைத் தவிர்த்­­­து தேசிய அளவில் பொது­­­மக்­­­களுக்­­­குத் தகவல் சார்ந்த பகுத்­­­த­­­றிவை எடுத்­­­துரைக்­­­கும் முதல் நாடாக சிங்கப்­­­பூர் திகழ்­­­கிறது.

Loading...
Load next