காணொளிப் பாடல் மூலம் ஆத்திசூடி

நித்திஷ் செந்­தூர்

தொடக்­கப்­பள்­ளி­யில் நாம் அனை­வ­ரும் ஆத்­தி­சூ­டியைப் பயின்று இருப்­போம். ஆனால் நம்­மில் எத்தனை பேர் அதனை முழுமை­யாக நினை­வுகூர்ந்து சொல்ல முடி­யும்? ஆத்­தி­சூ­டியை நினை­வு­கூ­ரும் வகை­யி­லும் அதனை இளம் பிள்ளை­களி­டம் அறி­மு­கம் செய்­யும் நோக்­கு­ட­னும் 'ஆத்­தி­சூடி இயக்­கம்' எனும் காணொ­ளிப் பாடலைச் சிங்கப்­பூர்த் தம்ப­தி­ய­ரான ஷம்ரோஸ் கான், சிவ­ரஞ்சனி இரு­வ­ரும் தயா­ரித்து வெளி­யிட்டு உள்­ள­னர். இசை தயா­ரிப்­பில் ஈடு­பட்­டி­ருக்­கும் ஷம்ரோஸ் கான், சிறப்­புத் தேவை­யுடைய பிள்ளை­களு­டன் சுமார் 8 ஆண்­டு­கள் பணி­யாற்றி, இசை­யின் வாயி­லாக அவர்­களின் தொடர்­புத் திறன் மேம்பாட்­டிற்­குப் பங்காற்றி வரு­கிறார்.

ஒரு புது முயற்­சி­யாக 'ஆத்­தி­சூடி' காணொளிப் பாட­லில் இப்­பிள்ளை­களைத் தோன்ற வைத்து, அவர்­களுக்­குத் தன்­னம்­பிக்கை அளித்­துள்­ளார் ஷாம் ரோஸ். சிங்கப்­பூர், மலே­சியா, இந்­தி­யாவைச் சேர்ந்த 32 இசைக் கலை­ஞர்­கள் தங்களின் பங்களிப்பை இப்­பா­ட­லுக்கு வழங்­கி­யுள்­ள­னர். சுமார் 120 பேர் இடம்­பெற்ற இக்­ கா­ணொ­ளிப் பாட­லில் 50 விழுக்­காட்­டி­னர் சிறப்­புத் தேவை­யுடைய பிள்ளை­கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!