இளையரை நிலைகுலைய வைக்கும் தூக்கக்குறைவு

சுதாஸகி ராமன்

மடிக்­க­ணி­னி­யில் வீட்­டுப்­ பா­டங்களைச் செய்­து­கொண்­டி­ருக்­கும்­போது ‘யூடியூப்’, ‘இன்ஸ்டா­கி­ராம்’ போன்ற சமூக ஊடகத் தளங்க­ளால் திசைதி­ருப்­பப்­படு­கிறார் காயத்ரி. நேரம் போவதே தெரி­யா­மல் சமூக ஊட­கங்களில் மூழ்கிவி­டும் அவர், பல நேரங்களில் வீட்­டுப்­பா­டங்களைச் செய்து முடிக்­கா­மல் போவதுண்டு. வீட்­டுப்­பா­டத்தை பள்ளி இடை­வேளையின்­போது அரக்­கப் பரக்க முடிப்பதும் உண்டு. பள்ளி முடித்த கையோடு இணைப்­பாட நட­வ­டிக்கை­கள்; அதனை முடித்து வீடு திரும்­ப இரவு எட்டு மணி ஆகிவிடும். அதற்கு மேல் வீட்­டுப்­பா­டங்களை முடித்­துத் தூங்­கு­வதற்­குள் நள்­ளி­ரவு மணி 12 ஆகிறது. இவ்வாறு இயங்­கும் 15 வயது ஆதித்­யா­வுக்கு ஆறு மணி நேர உறக்­கம் தான் கிடைக்­கிறது.

“வீட்­டிற்கு வரும் நேரம் முதல் நள்­ளி­ரவு வரை சமூக ஊட­கங்கள் போன்ற­வற்­றால் திசை­தி­ருப்­பப்­ப­டா­மல் பாடங்களில் மட்டும் ஆதித்யா அக்கறை செலுத்தி வருவதை நான் கவ­னித்து வரு­கி­றேன்,” என்றார் ஆதித்­யா­வின் தாயார் திருமதி பினித்தா. இருப்­பி­னும், காயத்ரி, ஆதித்யா ஆகி­யோரைப்போல பல சிங்கப்­பூர் பதின்­ம­வ­ய­தி­னர் குறைவான நேரம் மட்டுமே உறங்­கும் போக்கைக் கொண்­டுள்­ள­னர். ஒரு­வ­ரின் உடற்­ப­யிற்சி, உணவு முறைகள், தூக்கம் போன்ற­வற்றை கணக்­கி­டும் செயலியை உரு­வாக்­கி­யுள்ள ‘ஜாபோன்’ நிறு­வ­னம் ஈராண்­டு­களுக்கு முன்பு செய்த ஆராய்ச்­சி­யில் பொதுவாக சிங்கப்­பூ­ரர்­கள் குறைவான நேரமே உறங்­கு­கிறார்­கள் என்பது தெரி­ய­வந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்

18 Mar 2019

முழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி