ஆடவர் குழுவில் பெண் தலைமை

­­­தி­மத்தி டேவிட்

புக்கிட் ஹோ சுவீ குடி­யி­ருப்புப் பேட்டை­யில் உள்ள வாடகை வீட்டில் வசிக்கும் பிள்ளை­களின் விளை­யாட்­டுத் திறன்களை வளர்க்க ஊக்­க­மளிக்கும் முயற்­சி­யில் வெலன்­சியா கிளப் டி காற்­பந்து அணி­யி­னர் அப்­பேட்டைக்கு வருகை தந்திருந்த­னர். கடந்த ஒன்பது ஆண்­டு­க­ளாக புக்கிட் ஹோ சுவீ வட்­டா­ரத்­தில் வசிக்­கும் மற்ற சிறார்­களு­டன் சேர்ந்து அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பின் கீழ்த்­த­ளத்­தில் காற்­பந்து விளை­யா­டும் சாய் ராகா வைஷ்ணவி ரகு, 15, அந்த வட்டாரத்தில் வசித்து வரு­கிறார். அந்த வட்டாரத்தில் உள்ள இளம் விளையாட்டாளர்களின் ‘புக்கிட் ஹோ சுவீ நைட்ஸ்’ காற்பந்து அணித் தலை­வியாகவும்­ திகழ்கிறார் அவர். அலெக்­சாண்டர் டூரிச், ஃபாண்டி அகமது, சுந்­த­ர­மூர்த்தி போன்ற உள்ளூர் காற்­பந்து வீரர்­களைச் சந்­திக்­கும் வாய்ப்பு சென்ற வாரம் நடைபெற்ற இந்நிகழ்ச்­சி­யில் வைஷ்­ண­விக்­குக் கிட்­டி­யது. அத்­து­டன், வெலன்­சியா அணி யின் வீரர்­களைச் சந்­தித்து அவர்க ளு­டன் விளையாடி, புதிய உத்­தி­களைக் கற்­றுக்­கொண்ட­திலும் அவ­ருக்கு மிகுந்த உற்­சா­கம்.

சிங்கப்­பூ­ரின் பழமை­வாய்ந்த குடி­யி­ருப்­புப் பேட்டை­களில் ஒன்றான புக்கிட் ஹோ சுவீயில் நிகழ்ந்த தீ விபத்தை முன்­னிட்டு 1969ஆம் ஆண்டில் தொடங்­கப்­பட்ட தோண்­டூ­ழிய அமைப்­பான ‘பியாண்ட்’ சமூக சேவை அமைப்பு, அதே வட்­டா­ரத்­தில் வளர்ந்த வந்த ‘வெலன்­சியா கிளப் டி காற்­பந்து பீட்டர் லிம்’ உப­கா­ரச் சம்ப­ளத்­தின் உரிமை­யா­ளர் பீட்டர் லிம்­, சிங்கப்­பூர் ஒலிம்­பிக் அமைப்­பு ஆகியன இணைந்து இந்­நி­கழ்ச்­சியை ஏற்பாடு செய்தது.

 

வெலன்சியா காற்பந்துக் குழுவைச் சேர்ந்த ஜாவி ஃபுவேகோ பந்தைக் கையாளும் நேர்த்தியை ஆர்வத்துடன் கவனிக்கிறார் சாய் ராகா வைஷ்ணவி ரகு (வலமிருந்து இரண்டாவது). உடன் இருப்பவர் வெலன்சியா காற்பந்துக் குழுவைச் சேர்ந்த ஜாவுமி டொமினிக் (இடமிருந்து இரண்டாவது).

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்

18 Mar 2019

முழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி