வங்கியியல், நிதித்துறையில் வண்ணமயமான வாய்ப்புகள்

வழக்­க­நிலை நான்காம் ஆண்டில் படித்­துக்­கொண்­டி­ருந்த­போது கணக்­கி­யல் பாடத்­தில் திவா­க­ரன் கலை­வா­ணன் சிறப்­பாக முன்­னே­றி­யதைக் கண்ட ஆசி­ரி­யர்­கள் அந்தப் பாடத்தை அவர் சாதா­ர­ண­நிலைப் பாடமாக எடுத்­துக்­கொள்ள அனு­ம­தித்­த­னர். எதிர்­பா­ராத விதமாக மணிக்­கட்­டில் ஏற்­பட்ட காயத்­தினால் அவ­ருக்­குப் பிடித்த கணக்­கி­யல் பாடத்­தில் சிறந்த மதிப்­பெண்­களைப் பெற இய­லா­மல் போனது. அந்தத் தோல்­வியைக் கண்டு துவண்­டு­வி­டா­மல், கணக்­கி­யல் துறையில் உயர் நைடெக் கல்வி பயில எண்ணி தொழில்­நுட்ப கல்விக் கழக கிழக்கு வளா­கத்­தில் சென்ற ஆண்டு சேர்ந்தார் திவாகரன், 18. தற்போது இரண்டா­மாண்டு பயிலும் அவர், "உயர்­நிலைப் பள்ளியில் பயி­லும்­போது கணக்­கி­யல் பாடத்­தின் மீது ஏற்­பட்ட ஈர்ப்­பால் அதனை வாழ்க்கைத் தொழில் பாடமாக எடுத்­துக்­கொள்ள விரும்­பி­னேன்," என்றார்.

அவர் கணக்­கி­யல் பாடத்­தில் சிறப்­புற முன்­னே­றி­யதை அடுத்து அவரது துறைத் தலைவர் புவா மியோ லாங் அவரை யுபிஎஸ் யூத் ஃபைனான்ஸ் அகாடமி வழங்­கும் பயிற்சித் திட்டம் ஒன்றில் பங்கேற்­கத் தேர்ந்­தெ­டுத்­தார். இந்தத் திட்­டத்­தில் சேரும் மாண­வர்­களுக்கு வங்­கி­யி­யல், நிதித்­துறை ஆகி­ய­வற்றைப் பற்றி கற்­றுக்­கொள்­ளும் வாய்ப்பு அளிக்­ கப்­பட்­டது. "கற்­றுக்­கொள்­வ­தில் மிகுந்த ஆர்வம் கொண்ட திவா­க­ரன் இந்தத் திட்­டத்­திற்­குப் பொருத்­த­மா­ன­வர் என எண்­ணி­னேன்," என்றார் துறைத் தலைவர் புவா. இரண்டா­மாண்­டில் அடி­ யெ­டுத்து வைத்­தி­ருக்­கும் யுபிஎஸ் யூத் ஃபைனான்ஸ் அகாடமி, இளை­யர்­களிடையே தலைமைத்­து­வப் பண்­பு­களை மேம்படுத்­து­ வ­து­டன் நிதித்­துறை­யின் முக்கிய அம்­சங்களை அவர்­கள் புரிந்­து ­கொள்­ள­வும் வகை­செய்­கிறது.

திவாகரன் கலைவாணன் (வலது) உள்ளிட்ட 50 மாணவர்களுக்கு பயிற்­சித் திட்­டத்­தின் நிறைவு நாளில் யுபிஎஸ் நிறு­வ­னத்­தின் துணைத் தலைவர் கான் சியோ ஆன் (இடது) பயிற்­சிக்கான சான்­றி­த­ழ்­களை வழங்­கினார். படம்: யுபிஎஸ் யூத் ஃபைனான்ஸ் அகாடமி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!