‘பாலர்பள்ளி ஆசிரியராக ஒருநாள் வாழ்ந்தது அற்புதமான அனுபவம்’

நித்திஷ் செந்தூர்

பாலர்­பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ரா­கப் பணி ­பு­ரி­யும் அனுபவம் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் வியந்த­துண்டா? முயன்று பார்த்­த­னர் 66 இளை­யர்­கள்.

நீ ஆன் பலதுறைத் தொ­ழிற்­கல்­லூ­ரி­யும் 'சூப்­பர்­ஹீரோ மி' எனும் சமூக, கலைகள் இயக்­க­மும் இணைந்து இம்­மா­தம் 23, 24 ஆகிய தேதி­களில் பயி­ல­ரங்கு ஒன்றை ஏற்பாடு செய்­த­ன. பாலர்­கல்­வித் துறையில் பயிலத் தகு­தி­யுள்ள உயிர்­நிலைப்­பள்ளி, தொழில்­நுட்­பக் கல்விக் கழக மாண­வர்­கள் சிலர் பாலர் பள்ளி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றும் அனு­ப­வத்தைப் பெற்­ற­னர். 'தி கேட்­டர்­பில்­லர்'ஸ் கோவ்' குழந்தை மேம்பாடு, கல்வி நிலை­யத்தைச் சேர்ந்த 27 பாலர்­களை இம்­மா­ண­வர்­கள் வழி­ந­டத்­தி­னர். நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் ஆரம்ப­கா­லப் பாலர் கல்வி, குழந்தை மன­ந­லம் மற்றும் ஆரம்ப­கா­லக் கல்வி ஆகிய துறை­களில் பயிலும் இளை­யர்­கள் இப்­ப­யி­ல­ரங்­கில் ஒருங் கிணைப்­பா­ளர்­க­ளா­கச் செயல் பட்­ட­னர்.

பாலர்­களி­டம் எப்படி உரையாட வேண்டும், அவர்­கள் கேட்கும் கேள்­வி­களுக்கு எப்­ப­டிப் பதி­ல­ளிக்க வேண்டும், பரி­வு­டன் நடந்து கொள்வது எப்படி என்பது போன்ற நுணுக்­கங்கள் பயி­ல­ரங்­கில் பங்­கேற்ற இளை­யர்­களுக்­குக் கற்­றுத்தரப்பட்டது. 'வேறு­பாடு­களைத் தாண்டி நாம் அனை­வ­ரும் ஒன்று தான்' என்ற சிந்தனையை மாண­வர்­களின் மனதில் வேரூன்றச் செய்வது, அதன் மூலம் சிறப்பு தேவைகள் உடைய பாலர்­களைக் கேலி செய்­யக்­கூ­டாது என்ற நற் ­கு­ணத்தைக் கற்­பிப்­பது போன்ற­வற்றை பாலர்­களின் மனதில் பதி­யச்­செய்­வது அவ­சி­யம் என்பதை ஒருங்­கிணைப்பாளர்­கள் வலி­யு­றுத்தினர். பயி­ல­ரங்­கில் கற்­றுக்­கொண்ட விஷ­யங்களை பாலர்­களிடையே செயல்­படுத்­திய மாணவர்களை ஒருங்­கிணைப்­பா­ளர்­கள் கண் ­கா­ணித்து அவர்­கள் செய்யும் தவ­று­களை­யும் சுட்­டிக்­காட்­டி­னர்.

நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் குழந்தை மன­ந­லம், ஆரம்ப­கா­லக் கல்வித் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் காயத்ரி (பாலருடன் உரையாடுபவர்) ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்தப் பயிலரங்கில் பங்கேற்றவர்களோடு நுணுக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். படம்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!