தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்கு ‘இளையர் சித்தாந்தம்’

மா. பிரெமிக்கா

சிங்கப்­பூர்த் தமிழ்ச் சமூ­கத்தைப் பற்றிய இன்றைய இளம் தலை­முறை­யி­ன­ரின் கருத்­து­களை­யும் பரிந்­துரை­களை­யும் ஒரு தொகுப்­பாக ஆவ­ணப்­படுத்­த­வுள்­ளது சிங்கப்­பூர்த் தேசிய பல்­கலைக்­க­ழ­கத் தமிழ்ப் பேரவை. உலகத் தமிழ்ப் பல்­கலைக் க­ழக இளையர் மாநாடு 2012, சிங்கப்­பூர் தமிழ் இளையர் மாநாடு 2014 ஆகியவற்றின் வரிசை­யில் தமிழ்ப் பேரவை­யின் ஏற்­பாட்­டில் அடுத்த மாதம் 23, 24 தேதிகளில் 'கிராஸ் ரூட்ஸ் கிளப்'பில் நடைபெறவுள்ள 'சிங்கப்­பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2016' மூலமாக இதைச் சாதிக்­கத் திட்டமிடப்பட்டுள்­ளது. 'இளை­யர் சித்­தாந்தம்' என்று அழைக்­கப்­படும் இந்தத் தொகுப்பை அமைச்­சு­களுக்­கும் தமிழ்ச் சமூக அமைப்­புகளுக்­கும் மாநாட்­டின் ஏற்பாட்டுக் குழு­வி­னர் அனுப்­ப­வுள்­ள­னர்.

சிங்கப்­பூர்த் தமிழ்ச் சமூ­கத்­தின் எதிர்­கால மேம்பாட்­டுக்கு இந்த 'இளை­யர் சித்­தாந்தம்' கைக்­கொ­டுக்­கும் என்று நம்­பு­வ­தாகக் கூறினார் தமிழ்ப் பேரவை­யின் தலைவர் வி.அருள் ஓஸ்வின், 23. 16 முதல் 25 வய­துக்­குட்­பட்ட சுமார் 150 மேல்­நிலைக் கல்வி, பல்­கலைக்­க­ழக மாண­வர்­களும் இளை­யர்­களும் மாநாட்டில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது. எட்டு முதல் பத்துப் பேர் அடங்­கிய குழுக்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்­டுப் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட நெறி­யா­ளர்­களின் உதவி­யு­டன் தலைமைத் ­து­வம், கலை மற்றும் கலா­சா­ரம், கல்வி, சமூகச் சேவை என 4 பிரி­வு­களில் சிங்கப்­பூர்த் தமிழ்ச் சமூ­கத்தைச் சார்ந்த பல அம்­சங்களை இளை­யர்­கள் ஆரா­ய­ வுள்­ள­னர்.

நிபு­ணர்­கள் பங்கேற்கும் பகிர்வு அங்கங்களும் கேள்வி பதில் அங்கங்களும் இம்­மா­நாட்­டில் இடம்­பெ­றும். மாநாட்­டில் கலந்­துரை­யா­டப்­படும் பிரி­வு­களைப் பற்றிய விவ­ரங்கள், பல தரப்­பட்ட கருத்­துக்­கள் போன்றவை ஆவ­ணப்­ படுத்­தப்­பட்­டு மாநாட்­டில் கலந்­து­கொள்­ளும் இளை­யர்­களுக்­கு வழங்கப்­படும்.

இளைய சித்தாந்தம் ஆவணத் தொகுப்பை உருவாக்க உதவும் பல்கலைக்கழக மாணவர்கள். படங்கள்: தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!