இளையரையும் தாக்கும் ‘டிமென்‌ஷியா’

நித்திஷ் செந்தூர்

இளையரையும் விட்டுவைப்ப தில்லை அதீத ஞாபக மறதி எனும் 'டிமென்‌ஷியா'. இந்த நோயால் பாதிக்கப்படும் இளையர்கள் நீண்டகாலத்துக்கு பெரும் தாக்கத்துக்கு ஆளாகின் றனர். ஞாபகமறதி அதிகரிப்பால் இளையர் பலர் வேலையை இழக்கும் அபாயமும் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்படும் மருத்துவச் செலவு, பொருளாதாரத் தாக்கம் மூத்தோரைவிட இளையருக்கே அதிகம். மது அருந்துதல், மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை இந்நோய்க்கான முக்கிய காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.

அதீத ஞாபகமறதி நோயினால் உலகளவில் சுமார் 35 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் சுமார் 45,000 பேர் இந்நோயால் அவதியுறுகின்றனர். 2050ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை பல மடங்காக அதி கரிக்கும் என அஞ்சப்படுகிறது. சோர்வு, உற்சாகமின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை இந்நோயின் அறி குறிகள். இந்நோயை முழுமையாக குணப்படுத்த இயலாவிட்டாலும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் இந்நோய் ஏற்படுவதைத் தவிர்க்க லாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இசை கேட்டல், கலைகளில் ஈடுபடுவது, தைச்சீ உடற்பயிற்சி செய்தல், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுதல் ஆகியவற்றால் இப்பிரச்சினை மோசமாகாமல் தடுக்க முடியும். "இன்றைய இளையர்களின் வாழ்க்கைமுறைதான் இந்நோய் ஏற்பட முக்கிய காரணம். போது மான உடற்பயிற்சி செய்யாததால் உடற்பருமன் ஏற்படுகிறது. நாளடைவில் இதனால் பல நோய் கள் ஏற்பட்டு ஞாபகமறதிக்கு இட்டுச் செல்கின்றன. வாரத்திற்கு மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். மூளையைத் துடிப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க புதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக உடலையும் மூளையையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பது அவசியம்," என தேசிய நரம்பியல் மருத்துவக் கழகத்தின் இணைப் பேராசிரியர் நாகேந்திரன் கந்தையா கூறினார்.

"எளிய மூச்சுப் பயிற்சிகள் செய்வதால் ரத்த ஓட்டம் சீரடைந்து, மூளைக்குத் தேவையான ஆக்சி ஜன் சென்றடைகிறது," என்று யோகா பயிற்றுவிப்பாளர் ச.ஜெகதீசன் கூறினார். தமது தந்தைக்கு 84 வயதிலும் ஞாபகமறதி நோய் வந்ததில்லை என்று கூறிய திரு ஜெகதீசன், அவர் தினமும் யோகா செய்து வந்ததே இதற்கு முக்கிய காரணம் என்றார். "சர்வங்காசனமும் சிரசாசன மும் இந்நோயைக் குணப்படுத்த நல்ல யோகாசனங்கள். ஆனால் இவற்றைச் செய்ய முறையான பயிற்சி தேவை," என்றார் அவர். "உணவுமுறையிலும் கவனம் தேவை. வல்லாரைக் கீரை, வெண்டைக்காய், கேரட் போன்ற 'வைட்டமின் பி, சி, இ' நிறைந்த காய்கறி வகைகளை எண்ணெய் அதிகமாகச் சேர்க்காமல் சமைத்து உண்ணலாம்," என ஜெகதீசன் சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!