விளையாட்டுகளிடையே விழுமியங்களை விதைத்த தமிழ்மொழி பண்பாட்டு முகாம்

நித்திஷ் செந்தூர்

தோசை சுடுவது முதல் நாடகத் திறன்களைக் கற்­றுக்­கொண்டது வரை பல­வி­த­மான உற்­சா­க­ம­ளிக்­கும் நட­வ­டிக்கை­களில் ஈடு­பட்டு பண்­பாட்டு விழு­மி­யங்களை அறிந்­து­கொண்ட­னர் உயர்­நிலை ஒன்றில் பயிலும் 120 உயர்தமிழ் மாண­வர்­கள். வகுப்­பறை­யில் மட்டும் தமிழ்­மொ­ழி­யின் கற்றல், கற்­பித்­தல் இருந்­து­வி­டா­மல் வெளிப்­பு­றச் சூழ­லி­லும் அது நீடிக்க வேண்டும் என்ற நோக்­கத்­தோடு 'தமிழ்­மொழி பண்­பாட்டு முகாம் 2016' உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் சென்ற சனிக்கிழமை உற்­சா­க­மா­க­வும் விறு­வி­றுப்­பா­க­வும் நடை­பெற்­றது. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பழைய புகைப்­ப­டம் ஒன்றைக் கொண்டு வந்த மாண­வர்­கள் 'என் வாழ்க்கை என் பயணம்' என்ற தலைப்­பில் தங்க­ளது முன்னோர் பற்றிய மனதை வருடும் நினை­வு­களைக் குறிப்பு­க­ளாக வடித்­த­னர்.

மற்ற மாண­வர்­கள் 'வாழும் மொழி வாழும் மரபு' எனும் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்ள பாரம்ப­ரி­யக் கூறுகள் மூன்றைத் தேர்ந்­தெ­டுத்து அதன் தொடர்­பில் கதை ஒன்றை எழு­தி­னர். தமிழர் பாரம்ப­ரி­யம், முன்­னோர்­களின் சுய வரலாறு பற்றி அறிந்­து­கொள்ள இந்த அங்கம் வாய்ப்­ப­ளித்­தது. அதனைத் தொடர்ந்து கைக்­ க­ணி­னியைப் பயன்­படுத்தி விளை­யா­டும் மின் புதையல் வேட்டை, மொழி­ வ­ளத்தை மேம்படுத்த உதவும் மொழி விளை­யாட்டு, கூச்­ச­மின்றி, சர­ள­மா­கப் பேசு­வதற்­கான நுணுக்­கங்களை விளக்­கிய 'நானும் படைப்­பா­ளன்', மாறு­பட்ட கோணத்­தில் புகைப்­ப­டங்களை விவ­ரிக்­கும் 'பேசும் படமும் பேசாக் கதையும்', விதவி­த­மாய் தோசை செய்ய ஊக்­கு­வித்த 'வண்ணச் சமையல்' ஆகிய நட­வ­டிக்கை­களில் மாண­வர்­கள் ஈடு­படுத்­தப்­ பட்­ட­னர்.

உள்ளூர் தொலைக்­காட்சி படைப்­பா­ளர் திரு.நரேன், மாண­வர்­களி­டம் பேச்சின் நுணுக்­கங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். "சர­ள­மா­கப் பேசு­வதற்­கான நுணுக்­கங்களைக் கற்­றுக்­கொண்­டேன். மற்­ற­வர்­களி­டம் கலந்து உரை­யா­டும்­போது பயம் வில­கி­யது. பயம் இல்­லா­மல் பேசுவது முக்­கி­யம் என்பதைத் தெரிந்­து­கொண்­டேன்," என்று கூறினார் கோவோ சுவான் பிரஸ்பட்­டே­ரி­யன் உயிர்­நிலைப் பள்­ளி­யில் முத­லாண்டு பயிலும் அஹமது முஸ்தபா, 14. "அம்மா சுட்ட தோசையை இதுவரை சாப்­பிட்ட பழக்­கம்­தான் உண்டு. முதன்­முறை­யாக தோசை சுடும் அனு­ப­வத்தைப் பெற்றேன். எனது குழு­வி­னர் 'அ' எனும் தமிழ் எழுத்­தின் வடிவில் தோசையைச் சுட்­ட­னர்," என்ற விக்­டோ­ரியா பள்ளி மாணவர் அபிநவ் ஆனந்த் அர­விந்தன்,

13, தோசையைத் திருப்­பு­வது மிகவும் சிர­ம­மான வேலை என்றார். "எதிர்­கா­லத்­தில் மாணவர் களை தமிழ் நிகழ்ச்சி படைப் ­பா­ளர்களா­க­வும் நிக­ழச்சி நெறி ­யா­ளர்­க­ளா­க­வும் உரு­வாக்­கும் பொருட்டு இந்த முகாமில் 'நானும் படைப்­பா­ளன்', 'நாடகப் பட்டறை' போன்ற நட­வ­டிக்கை­கள் ஏற்பாடு செய்­யப்­பட்­டி­ருந்தன," என முகாமின் ஏற்­பாட்­டுக் குழுத் தலைவர் டாக்டர் ரா.விமலன் கூறினார். "தமிழ் கற்றல் மொழி மட்டும் அல்ல, அது வாழ்­வி­யல் மொழி. எதிர்­கா­லத்­தில் மாண­வர்­கள் எந்தத் துறையில் பணிபு­ரிந்தாலும் அதில் தமிழ் சார்ந்த ஈரம் இருக்க வேண்டும்," என்று உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தின் இயக்­கு­நர் அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் குறிப்பிட்டார்.

வண்ணமயமாகவும் 'சாக்லெட்', காய்கறிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சுவையாகவும் தோசையைப் பல வடிவங்களில் சுட்டு அசத்திய இளையர்கள் தோசையைத் திருப்பிப் போடுவது மிகவும் சிரமமான செயல் என்றனர். படம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!