சவால்களைச் சாதனையாக்கிய சரவணன்

நித்திஷ் செந்தூர்

தளராத மனதுடன் வற்றாத உழைப்­பின் காரணமாக உன்­ன­தத் தேர்ச்சி பெற்றுள்ளார் சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த சர­வ­ணன் குண­சீ­லன், 25. இம்­மா­தம் ஒன்பதாம் தேதி சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­ க­ழ­கத்­தி­லி­ருந்து உயிர்அறி­வி­யல் துறையில் 'ஹானர்ஸ்' (உயர் சிறப்­புத் தேர்ச்சி) தகுதியுடன் இளங்கலைப் பட்­டம் பெற்றார். வெற்றி இவருக்கு அவ்வளவு எளிதில் கிட்டிவிடவில்லை. கல்விச் செலவுகளைச் சமாளிக்க அவ­ருக்கு நிதி நெருக்­கடி இருந்தது. வங்கியிலிருந்து கல்விக்கடன் பெற்றிருந்த­போ­தும் படிப்பு சார்ந்த இதர செலவுகளை அவரால் சமாளிக்க இய­ல­வில்லை. நிதிச் சுமையைக் குறைக்க மாணவர்களுக்குத் துணைப்­பாட வகுப்­பு­களை நடத்தினார்.

நேரத்தை நன்கு வகுத்து, படிப்பை­யும் சமூக நட­வ­டிக்கை­களில் தனது ஈடு­பாட்டை­யும் நேர்த்­தி­யாக நிர்­வ­கித்­துக் கொண்டார் சர­வ­ணன். பல்­கலைக்­க­ழ­கத்­தில் படித்­துக் கொண்­டி­ருக்­கும்போது, இவர் 'என்யுஎஸ்எஸ்யு எங்கேஜ்' எனும் புதிய புறப்­பாட நட­வ­டிக்கையை உரு­வாக்­கி­னார். இதர துறையில் பயிலும் மாண­வர்­களும் இந்தப் புறப்­பாட நட­வ­டிக்கை­யில் இணைந்து தங்களுக்குள் கருத்­து­களைப் பரி­மாறி, துடிப்­பு­மிக்க மாணவர் சமூ­கத்தை உரு­வாக்க இது வழி­ வ­குத்­தது. "வாரந்­தோ­றும் 'யூசுஃப் இஷாக் ஹவுஸ்' எனும் மாணவர் கூடத்தில் நடை­பெ­றும் ஒன்­றுகூ­ட­லின்போது ஆண்­=­பெண் உறவு, படிப்பு, மன உளைச்­சல் எனப் பலத­ரப்­பட்ட விஷ­யங்களைப் பற்றி கலந்­துரை­யா­டல் நடை­பெ­றும்," என சரவணன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!