சிந்தனையைத் தூண்டிய பாடத்திட்டத்தால் சிறப்புற முன்னேறிய அம்ரிதா

சுதாஸகி ராமன்

எந்த­வொரு பிரச்­சினைக்­கும் நடை­முறைக்­குத் தகுந்த­படி லாப­க­ர­மான தீர்­வு­களைக் கண்­டு­பி­டித்து சமூ­கத்­திற்­குப் பொறி­யா­ளர்­கள் ஆற்றும் முக்கிய பணியை குமாரி அம்ரிதா ராஜகுமார் இளம் வய­தி­லேயே புரிந்­து­கொண்டார். பொறி­யா­ள­ர்களா­கப் பணி­பு­ரி­யும் தம் பெற்­றோரைக் கவ­னித்து வந்த அவர், அவர்­கள் காட்டிய பாதையைப் பின்­பற்றி சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் மின்­னி­யல் பொறி­யி­யல் துறையில் சேர்ந்தார். அத்­துறை­யில் சிறந்து விளங்­கிய 22 வயது அம்ரிதா, பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மேற்கொண்ட முயற்­சி­யின் பலனா­கக் கடந்த வாரம் 'ஹானர்ஸ்' (உயர் சிறப்­புத் தேர்ச்சி) தகுதியுடன் பட்­டம் பெற்றார்.

"என்னை வளர்த்த சமூ­கத்­திற்கு என்னால் இயன்றதைத் திருப்­பிக்­கொடுக்க எண்­ணி­னேன். அதை என் நீண்ட நாள் குறிக்­கோ­ளாக வைத்­தி­ருந்­தேன். தேசிய தின அணி­வ­குப்பு, தமிழ் சார்ந்த நட­வ­டிக்கை­கள், தொண்டூழியம் போன்ற­வற்­றில் ஈடு­படு­வதன் வழியாக என்னால் இயன்ற உதவி­களை மற்­ற­வர்­களுக்­குச் செய்­வ­தில் மகிழ்ச்சி கொள்­கி­றேன்," என்றார் அவர். பல்­கலைக்­க­ழ­கத்­தில் பல­தரப்­பட்ட அணு­கு­முறை­யின் மூல­மா­கப் பொறி­யி­யல் பாடங்க­ளோடு நாட­கக்­கலை, பொரு­ளி­யல், பலவகை உயி­ரி­னம் போன்ற மற்ற துறைப் பாடங்களை­யும் பயில அவருக்கு வாய்ப்பு கிடைத்­தது. இதனால் பொறி­யி­யல் துறையை வித்­தி­யா­ச­மான கண்­ணோட்­டத்­தில் தம்மால் பார்க்­க ­மு­டிந்ததை அம்ரிதா சுட்­டிக் காட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!