எத்துறையில் மிளிர்ந்தாலும் சமூகப் பணியில் அக்கறை

முஹம்­மது ஃபைரோஸ்

எண்ணிக்கையில் மிகச் சிலரே அடையக்கூடிய வெற்றியை ஈட்டி இருக்கிறார் குமாரி மோனிகா கேப்ரியல், 23. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் சட்டத் துறையில் பட்டக் கல்வி மேற்கொண்ட மோனிகா 'ஹானர்ஸ்' (முதல் வகுப்பு) தகுதியுடன் பட்டம் பெற்றுள்ளார். சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக் ­க­ழ­கத்­தில் கல்விப் பயணம் ஏற்ற இறக்­க­மாக அமைந்தது என்று கூறிய மோனிகா போட்­டித்­தன்மை­மிக்க மாண­வர்­களுக்கு மத்­தி­யில் எவ்வாறு தனித்து நிற்பது என தமக்குள் கேள்வி எழுந்தாலும் தொடக்கத்தில் எந்த­வொரு வான­ளா­விய எதிர்­பார்ப்பை­யும் உரு­வாக்­கிக்கொள்­ளவில்லை என்றார்.

கடந்த வாரம் நடை­பெற்ற பல்­கலைக்­க­ழ­கப் பட்­ட­ம­ளிப்பு விழாவில் பட்டச் சான்­றி­தழைப் பெற்­றுக்­கொண்ட இவர், விடா­மு­யற்சி, அயராத உழைப்­பு ஆகியவற்றால் வெற்­றிக்­கனி கிட்­டி­யதென்றார். "தொடக்­கத்­தில், யதார்த்­த­மில்­லாத எதி­ர்­பார்ப்­பு­களை வைத்­தி­ருப்­பது ஆரோக்­கி­ய­மற்­றது என்பதை உணர்ந்­தேன். ஆனால், துறைத் தலை­வ­ரின் சாதனைப் பட்­டி­யலில் தொடர்ச்­சி­யாக இரு ஆண்­டு­க­ள் இடம்பிடித்­த­வு­டன் எனக்­குள் நம்­பிக்கை பிறந்தது. நாம் செய்யும் செயலே நாம் யார் என்­பதைப் பிர­தி­ப­லிக்­கும்," என்றார் மோனிகா.

சிறந்த தேர்ச்சி பெற்றது தம்­முடைய முயற்­சிக்­குக் கிடைத்த பலன் என்று கூறிய மோனி­கா­வுக்கு, பல நேரங்களில் வேலைப்­ப­ளு­வினால் அடுத்த நாளுக்கு முடிக்க வேண்டிய வாசிப்­பு­களைக்கூட முடிக்க முடி­யா­மல் போன நினை­வு­களும் உண்டு. "சட்டத் துறை வழங்­கும் கடுமை­யான பாடத்­திட்­டம் ஏரா­ள­மான சவால்­களை­யும் வாய்ப்­பு­களை­யும் அள்ளித் தந்தது. கட்­சிக்­கா­ர­ருக்கு கடிதம் வரைவது, வர்த்­தக உடன்­பாட்டை எழு­து­வது, கொலைக் குற்றம் சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு ஆத­ர­வாகக் குற்­ற­வி­யல் தற்­காப்பு வழக்­க­றி­ஞ­ராக வாதா­டு­வது எனப் பல புதிய அனு­ப­வங்கள் கிடைத்­தன," என்று தமது கல்விப் பயணம் பற்றி விவ­ரித்­தார் மோனிகா. அயர்­லாந்­தி­லுள்ள 'டிரி­னிட்டி காலெஜ் டப்ளின்' பல்­கலைக்­க­ழ­கத்­தில் மாணவர் பரி­மாற்­றத் திட்­டத்­தில் பங்­கேற்­றது இவ­ருக்கு மறக்­க­மு­டி­யாத அனு­ப­வ­மாக அமைந்தது. குறிப்­பி­டத்­தக்க கால­கட்­டத்­திற்கு குடும் பத்தை­விட்டுப் பிரிந்­தி­ருந்தது சவாலாக அமைந்தா­லும் துணிச்­சல், தன்­னம்­பிக்கை போன்ற பண்புகளை வளர்த்­துக்­கொள்ள மோனி­கா­வுக்கு அது வாய்ப்­ப­ளித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!