அயராத உழைப்பால் அழகிய படைப்பாக ‘ஹான்’

சுதாஸகி ராமன்

இலை­யு­திர் காலத்தில் தென் கொரியாவின் எழில் கொஞ்சும் தோற்றத்தை­யும் அதன் கலா­சா­ரத்தை­யும் பின்­ன­ணி­யா­கக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்ப­ட­மான 'ஹான்', அண்மை­யில் நடை­பெற்ற தேசிய இளையர் திரைப்­பட விரு­து நிகழ்ச்சியில் 'டிபிஎஸ்' சிறந்த படத்­திற்­கான விருதைத் தட்டிச் சென்றுள்ளது. பல தலை­முறை­க­ளாக கொரியர்களிடையே வியாபித் திருக்கும் தீர்க்­கப்­ப­டாத வருத்­தமும் விளக்க முடியாத சோகமுமான உணர்வு கொரிய மொழியில் 'ஹான்' எனப் படுகிறது. குறும்ப­டத்­தின் மூலம் இந்த உணர்வைச் சித்திரிக்க முற்பட்டிருக்கிறார் படத்­தின் இயக்­கு­நர் ஜானத்­தன் சூ.

மகனுடைய கவ­னக்­குறை­வால் ஏற்­பட்ட சாலை விபத்­தில் சிக்கி மாண்­டு­போன கொரிய பெண்ணின் பெற்­றோரைக் காண சிங்கப்­பூ­ரி­லி­ருந்து தென் கொரியா வரை செல்லும் ஒரு தந்தை­யின் கதையை மைய­ மா­கக்கொண்டு எடுக்­கப்­பட்­டது 'ஹான்'. பார்ப்­ப­வர் மனங்களை நெகிழவைக்­கும் இந்தக் குறும் ப­டம், நன்யாங் தொழில்­நுட்பப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் படத்­ த­யா­ரிப்­புத் துறையில் பட்­டக் கல்வி மேற்கொண்ட நான்காம் ஆண்டு மாண­வர்­கள் ஆறு பேருடைய இறுதி ஆண்டு ஒப் படைப்­பாக உருவாக்கப்பட்டது. தந்தை, மகன் இரு­வ­ருக்­கு­மிடையே உள்ள உறவு, 'ஹான்' உணர்வு, ஆகிய இரண்டையும் பற்றி குறும்ப­டம் எடுக்க ­வேண்­டும் என்ற ஆர்­வத்­தில் இதைக் கருவாகக் கொண்டு படத்தை உரு­வாக்­கினார் இயக்­கு­நர் ஜானத்­தன்.

'ஹான்' உணர்வை தத்­ரூ­ப­மாகப் படம்­பி­டிக்­கும் நோக்கில் கொரி­யா­விற்­குச் சென்று கொரிய கலா­சா­ரத்­தின் சில அம்­சங்களைப் படத்­தில் பொருத்த எண்­ணினார் அவர். சிங்கப்­பூ­ரி­லும் குறும்ப­டத்­தின் சில காட்­சி­கள் எடுக்­கப் ­பட்­டன. இதைத் தொடர்ந்து குறும்ப­டத்­தின் தயா­ரிப்­பா­ள­ரான ஷாமினி குண­சே­க­ரன் அதற்­கான முயற்­சி­களை மேற்கொண்டார்.

சிறந்த படத்துக்கான விருதினைப் பெற்ற 'ஹான்' குறும்படத்தின் இயக்குநர் ஜானத்தன் சூ, அதன் தயாரிப்பாளர் ஷாமினி குணசேகரன் (வலது). அதே படத்துக்கு சிறந்த இயக்குநர் விருதை ஜானத்தன் சூ பெற்றார். படம்: தேசிய இளையர் திரைப்பட விருது விழா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!