பரு­வ­நிலை மாற்­றத்தைத் தடுக்க அனைவருக்கும் பங்குண்டு

முஹம்­மது ஃபைரோஸ்

பரு­வ­நிலை மாற்­றத்தைத் தடுக்க சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர்­கள் சுற்­றுப்­பு­றத்தைப் பேணிப் பாது­காக்­கும் நோக்கில் சமூ­கத்­தில் பல்வேறு இயக்­கங்களைச் செயல்­படுத்தி வரும் வேளையில், இவற்றை வெற்­றிக­ர­மாக்க அனை­வ­ரின் பங்களிப்­பும் இன்­றி­யமை­யா­தது என்­கிறார் சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர் வீரப்­பன் சுவா­மி­நா­தன், 30. தூய்மை­யான, பசுமை­யான சுற்­றுப்­பு­றத்தைப் பாது­காப்பதற்கான அவரது தொடர் முயற்­சிக்கு கடந்த வாரம் பலன் கிட்­டி­யது. அரசு சார்­பற்ற அமைப்பு மற்றும் அடித்­த­ளத் தொண்­டூ­ழி­யர்­கள் பிரி­வின்­கீழ் தேசிய சுற்­றுப்­புற வாரியம் இவ­ருக்கு 'சுற்றுச்சூழல் நண்பன்' எனும் விருதை வழங்கிச் சிறப்­பித்­தது. தூக்கி வீசப்­படும் பொருட்­களை மறு­ப­யன்­பாடு செய்­வ­தி­லும், கழிவுப் பொருட்­களைப் பய­னுள்ள பொருட்­க­ளாக மாற்­று­வ­தி­லும் திரு வீரப்­பன் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளார்.

சிங்கப்­பூர் முழு­வ­தும் பல சமூகத் தளங்களில் நடத்­தப்­படும் 'ரிப்பேர் கோப்பித்தியாம்' எனும் பயி­ல­ரங்­கு­கள் தொடருக்கு வித்திட்டவர் இவரே. பழுதாகி வீசப்­ப­டக்­கூ­டிய பழைய பொருட்­களை எவ்வாறு பய­னுள்­ள­தாக்­கு­வது என்பது குறித்து இங்கு பயிற்­சி­பெற்ற தொண்டூ­ழி­யர்­கள் மற்றவர்களுக்கு சொல்லித் தரு­கின்ற­னர். "மக்கள் எளிதில் வீசி­வி­டும் பழைய பொருட்­களில் பெரும்பா­லா­ன­வற்றைப் பழு­து­பார்த்து மீண்டும் பயன்­படுத்த முடியும் என்பதை அவர்­களுக்­குத் தெரியப்படுத்த விரும்­பி­னேன்," என்றார் 'சஸ்டெய்னபள் லிவிங் லேப்' எனும் சமூக நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரான திரு வீரப்­பன். 2014ஆம் ஆண்டு முதல் 35,000க்கும் மேற்­பட்­டோர் 26க்கும் அதி­க­மான இத்­தகைய பயி­ல­ரங்­கு­களில் பங்­கெ­டுத்­துள்­ள­னர். ஒவ்வோர் அமர்­வி­லும் சரா­ச­ரி­யாக 32 பொருட்­கள் பழு­து­பார்க்­கப் ­பட்­டன.

சுற்­றுப்­பு­றத்தைப் பாது­காக்க வித்­தி­யா­ச­மான முயற்­சி­யில் இறங்­கிய வீரப்­பன் சுவா­மி­நா­த­னுக்கு 'சுற்­றுச்­ சூ­ழல் நண்பன்' எனும் விருதை சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்­கி­ஃப்லி (இடது) வழங்­கினார். படம்: தேசிய சுற்­றுப்­புற வாரி­யம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!