இலக்கை எட்ட பார்வையின்மை தடையல்ல

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

எளிதில் நாம் மேற்கொள்ளக் ­கூ­டிய பல செயல்பாடுகள் சிறு வய­தி­லேயே கண் பார்வை இழந்த ஜான் தனே­‌ஷுக்கு சவாலாக அமை­ய­லாம். இருப்­பி­னும், ஒரு­ போ­தும் இவர் நம்­பிக்கை இழக்க­வில்லை. தற்போது ரிபப்­ளிக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் முதலாம் ஆண்டு மாண­வ­ராக சமூக நிறுவன நிர்­வா­கத் துறையில் பட்­ட­யக் கல்வி மேற்­கொள்­கிறார் 17 வயது ஜான். தாயார், பாட்­டி­ ஆகியோரை உள்­ள­டக்­கிய ஒற்றைப் பெற்றோர் குடும்பத்­தி­ன் அங்கமான ஜான் படி­ப்ப­டி­யாக முன்னேறி, கற்கும் சூழலில் ஒருங்­கிணைய பலர் உதவி­யுள்­ள­னர். இந்த நன்றியை அவர் மறந்­தி­ட­வில்லை.

தன் பங்­கிற்குப் பிற­ருக்கு உத­வு­வதே தன் வாழ்க்கைத் தொழி­லாக அமைய வேண்டும் என இத்துறையில் பயில முடி­வு­ செய்­த­தாக ஜான் கூறினார். இவரது கற்­றலுக்கு 'ஸ்கிரீன் ரீடர்' செயலி உத­வு­கிறது. அச்செயலி சொற்களை அவ­ருக்கு வாசித்­துக்­காட்­டுகிறது. கற்­றலுக்கு அவர் கைக்கணி­னியை­யும் சாதாரண விசைப்பலகையையும் பயன்­படுத்­து­கிறார். "குழு நட­வ­டிக்கை­யென்று வரும்­போது, அதில் ஜானின் முழு ஈடுபாடு இருக்­கும். வகுப்­பில் நிறைய கேள்­வி­கள் கேட்பார், எனது மாண­வர்­களில் அதிக தன்­முனைப்பு உடை­ய­வ­ராக அவர் திகழ்­கிறார்," எனக் கூறினார் ஜானின் விரி­வுரை­யா­ள­ரான திரு பீட்டர் லீ, 39.

கண் ­பார்வை­யின்மை­யால் சில பாடங்களை ஜான் மேற்­கொள்ள முடியாது. ஆனாலும் அந்த வகுப்­பு­கள் நடத்தப்படும்­போது விரி­வுரை­யா­ளர்­கள் கற்­பிப்­பதைச் செவி­ம­டுத்து ஜான் கேள்விக் கணைகளைத் தொடுக்கும்போது அது சக மாண­வர்­களி டையே நேர்­மறை­யான தாக்­கத்தை ஏற்­படுத்­து­கிறது என ஜானின் மற்றொரு விரி­வுரை­யா­ள­ரான திரு டேனி லீ தெரி­வித்­தார். "நல்ல மதிப்­பெண்­கள் பெற்று பல்­கலைக்­க­ழ­கத்­திற்கு முன்னேற வேண்டும். அங்கு சட்டம், சமூ­க ­வி­யல் தொடர்­பான துறை­களில் பயின்று ஒரு வழக்­க­றி­ஞ­ராக வேண்டும்," என்பதே தமது இலக்கு என்றார் ஜான்.

வழக்­க­றி­ஞ­ரின் சேவையை நாடு­வதற்கு சில­ருக்கு வசதி இருக்­காது என உணரும் ஜான், எதிர்­கா­லத்­தில் அத்­தகை­யோ­ருக்கு இல­வ­ச­மாக உதவ விரும்­பு­கிறார். விருப்­ப­மான நட­வ­டிக்கை­களில் அவர் ஈடுபட பார்வை­ யின்மை தடையாக இருந்த­ தில்லை. பொழு­து­போக்கு நட­வ­டிக்கை­களில் ஒன்றாக, நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் ஜான் ஜூரோங் நீச்சல் வளா­கத்­திற்குச் சென்று நீந்­துகிறார். "யாருக்கு உதவி தேவைப்­பட்­டா­லும் அவ­ருக்கு உத­வு­வ­தில் மனம் ஒருவித ­தி­ருப்தி கொள்கிறது. தனிமனிதனாக உலகை என்னால் மாற்­றி­ட­ மு­டி­ யாது. ஆனால் என் வாழ்­நா­ளில் குறைந்தது 5 பேருக்­கா­வது உதவ முடிந்தால் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்­தம் இருக்­கும் என்று கருதுகிறேன்," என்றார் ஜான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!