அறிவியல் போட்டியில் அட்டை பீரங்கிகள்

மாண­வர்­களுக்கு அறி­வி­யலை விளை­யாட்­டு­கள் மூலம் கற்றுக் கொடுக்கும் நோக்கில் நன்யாங் பலதுறைத் தொழிற்­கல்­லூரி இம்மாதம் 14ஆம் தேதி நடத்­திய அறி­வி­யல், தொழில்­நுட்ப சவாலில் விக்­டோ­ரியா பள்ளி மாண­வர்­கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்­கள். 29 பள்­ளி­கள் கலந்­து­கொண்ட இந்தப் போட்­டி­யில் மொத்தம் 15 பிரி­வு­கள் இருந்தன. வெற்றி பெற்ற விக்­டோ­ரியா பள்ளி மாண­வர்­கள், ‘Vo­r­t­ex Ring Air Ca­n­n­on’ எனும் பிரிவில் கலந்­து­கொண்ட­வர்­கள். பள்ளித் தேர்­வு­கள் முடிந்த­தால், இந்த நேரத்தைப் பய­னுள்ள வழியில் செலவிட இப்போட்­டி­யில் பங்­கேற்­றதாகக் கூறினார் விக்­டோ­ரியா பள்­ளி­யில் உயர்­நிலை மூன்றாம் வகுப்­பில் பயிலும் 15 வயது நிருபன் நவ­நீ­தன்.

எட்­டா­வது ஆண்டாக நடை­பெற்ற இந்த அறி­வி­யல், தொழில்­நுட்­பப் போட்­டி­கள் உயர்­நிலைப் பள்ளி மாண­வர்­களி­டம் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், கணிதம், பொறி­யி­யல் ஆகிய துறை­களில் ஆர்­வத்தைத் தூண்டும் விதத்­தில் இருந்தன. போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் பல்வேறு அறிவியல் நுணுக்கங்களைப் பயன்படுத்தி வித்தியாசமான தீர்வுகளை வடிவமைத்தனர்.

Vo­r­t­ex Ring Air Ca­n­n­on பிரிவில் கலந்­து­கொண்ட மா­ண­வர்­கள், வழங்கப்­பட்ட காகிதப் பொருட்­களைக் கொண்டு 90 நிமிடங்களில் ஓர் அட்டை பீரங்­கியைத் தயா­ரிக்க வேண்­டி­யி­ருந்தது. போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட பந்துகளை அந்தப் பீரங்­கி­யி­லி­ருந்து வரும் காற்று மூலம் போட்டி மேசையில் இருக்கும் 11 துளைகளுக்குள் தள்­ளி­விட வேண்டும். மேசையில் பந்து நுழையும் துளைகள் இருக்­கும் இடத்தைப் பொறுத்து வழங்கப்­பட்­ட மதிப்­பெண்­களின் அடிப்­படை­யில் வெற்­றி­யா­ளர் குழு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது.

இந்தப் போட்டியை நடத்துவதற்கு முன்பாக அதில் பங்­கேற்­கும் மாண­வர்­களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயி­ல­ரங்கு ஒன்றை நன்யாங் தொழிற்கல்லூரி நடத்தியது. போட்­டி­யில் எந்தப் பொருட்­கள் கொடுக்­கப்­படும் என்று தெரியாத கார­ணத்­தினால் அவர்களது ஆசி­ரி­யர் போட்டிக்குத் தயார் செய்யும் நோக்கில் பல­வி­த­மான பொருட்­களைக் கொடுத்து மாண­வர்­களைப் பழக்­கப்­படுத்­தினார்.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்ற அறிவியல், தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு வென்ற விக்டோரியா பள்ளியைச் சேர்ந்த குழுவின் உறுப்பினர்கள் 90 நிமிடங்களில் அட்டை பீரங்கியைத் தயாரித்தனர். அக்குழுவைச் சேர்ந்த (இடமிருந்து) ஆதித்யா ஸ்ரீநிவாசன், நிருபன் நவநீதன், பரம் ஸ்ரீநிவாசன், அழகப்பன் ராமநாதன். படம்: விக்டோரியா பள்ளி, செய்தி: யாஸ்மின் பேகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திருநாவுக்கரசு வள்ளியம்மை

18 Nov 2019

பாடலும் என் பள்ளியும்

குமாரி சர்மிலி செல்வராஜி

18 Nov 2019

‘தடமாற்றங்களால் ஏற்படும் தடுமாற்றங்கள்’

‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
படங்கள்: ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ்

18 Nov 2019

பெண்ணியத்திற்காக குரலெழுப்பும் மாதர்