வடிவமைப்பு, உற்பத்தித் துறையில் ஆர்வம்கொண்ட ஜனனி தர்மராஜா

சிங்கப்­பூ­ரின் முன்னாள் அதிபரான அமரர் எஸ்.ஆர் நாத­னி­டம் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ச்சி ஒன்­றில் விருது வழங்­கு­மாறு அழைப்புவிடுத்து அதில் திரு நாதனுக்கே 'தலை­சி­றந்த சிங்கப்­பூ­ரர்' என்ற விருது வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நிகழ்ச்­சியைக் காணொளி மூலம் பதிவுசெய்­த­வர் ஜனனி தர்­ம­ராஜா, 19. அந்தக் காணொளியை 'தி ஹிடன் குட்' எனும் சமூக நிறு­வ­னத்­தின் சார்பில் உரு­வாக்­கிய ஜனனி அதனை 'யூடி­யூப்'­பில் பதி­வேற்றி பலரது பாராட்­டு­களைப் பெற்றார். கருணை மிகுந்த சமு­தா­யத்தை உரு­வாக்­கும் நோக்கில் நல்ல விஷ­யங்களை மக்­களிடையே பரப்­பும் 'தி ஹிடன் குட்' அமைப்­பில் உள்­ள­கப் பயிற்­சிக்­கா­கச் சேர்ந்த­போது ஜன­னிக்கு இந்த அரிய வாய்ப்பு கிட்­டி­யது.

ஊடகத் துறையில் வடி­ வமைப்பு, தயா­ரிப்பு போன்ற­வற்­றின் மீது ஆர்வம் கொண்­டுள்ள ஜனனி சமு­தா­யத்­தில் நடை­பெ­றும் நல்ல விஷ­யங்களைக் காணொ­ளி­யாக்கி ஊடகம் மூலம் பரப்ப விழை­கிறார். அத்­தகைய ஆர்­வத்­தினால் மக்கள் தொடர்­பி­யல் துறையில் மூன்றா­மாண்டு பயில்­கிறார் அவர். இருப்­பி­னும், கட்­டுரை­கள் எழு­து­வ­தில் அவ­ருக்கு அவ்­வ­ளவு விருப்­ப­மில்லை. நல்ல கட்­டுரை­கள் எழுதும் சக மாணவர்களைக் கண்ட ஜனனி, தம்­மி­டம் எழுத்­துத் திறன் இல்­லா­த­தற்கு மிகுந்த வருத்­தம் கொண்டார். 'தேர்ந்­தெ­டுத்த பாதை சரிதானா?' என்ற கேள்­வி­யும் அவ­ருக்­குள் எழுந்தது. ஆனால், பெற்றோர் அளித்த ஊக்­கத்­தினால், நல்ல கட்­டுரை­கள் எழுத தொடர்ந்து முயற்சி செய்­து­வ­ரு­கிறார் ஜனனி.

தமக்­குள் எழும் சந்­தே­கங்களை உட­னுக்­கு­டன் ஆசி­ரி­யர்­களி­டம் கேட்டுத் தெளிவு பெறும் ஜனனி, விடாமுயற்­சி­யால் கல்­வி­யில் சிறந்து விளங்­கு­கிறார். நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் சார்பில் அனு­ப­வக் கல்­விக்காக கம்­போ­டி­யா­வுக்கு 15 நாட்கள் சென்று அங்­கி­ருந்த சிறு­வ­ருக்கு ஆங்­கி­லம் கற்­பித்­தல் போன்ற தொண்டு நட­வ­டிக்கை­களில் ஈடு­பட்­டார். கம்­போ­டி­யர் ­களின் வாழ்க்கைச் சிர­மங்களைக் கண்ட­பி­றகு, சிங்கப்­பூ­ரில் கிடைக்­கும் வசதி, வாய்ப்­பு­களைச் சரி­யா­கப் பயன்­படுத்­திக் கொள்ள வெண்டும் என்ற எண்ணம் தோன்­றி­ய­தா­கச் சொன்னார். சமூகப் பணிகள் துறையில் பட்­டக்­கல்வி மேற்­கொள்ள விரும்­பும் ஜனனி, பிற்­­­கா­­­லத்­­­தில் உதவி தேவைப்­படும் முதி­­­யோர்­­­களுக்கு உதவத் திட்­­­ட­­­மிட்­­­டி­­­ருக்­­­கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!