சிரமங்களைச் சமாளித்து சிறப்பான முன்னேற்றம்

யாஸ்மின் பேகம்

தந்தை­யின் ஆதரவு இல்லை. தாயார் வேலைக்­குச் சென்று பொரு­ளீட்ட இய­லா­த­து­டன் அவ­ருக்கு மருத்­து­வச் செல­வு­களும் மேற்­கொள்ள வேண்டிய நிலை. தம்­முடைய கல்விச் செலவு, வீட்­டுக்­க­டன் உள்­ளிட்ட குடும்பச் செல­வு­கள் ஆகிய அனைத்தை­யும் முன்­னின்று கவ­னித்து குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்­பில் குடும்பத்­தின் மூத்த மகனான 27 வயது ஜோவியன் நைஜல். தொழில்­நுட்­பக் கல்விக் கழ­கத்­தில் இரு முறை பயில வேண்டிய கட்­டா­யம் ஏற்­பட்­டா­லும் முதல் முறை சரி­யா­கப் படிக்­கா­த­தால் ஏற்­பட்ட சறுக்­கல், கல்­வி­யின் அவ­சி­யத்தை உண­ரவைத்­த­தா­கக் கூறிய ஜோவியன் மன உறு­தி ­யு­டன் தொடர்ந்து முயற்சி செய்­கிறார். எத்தனை துன்­பங்கள் வந்தா­லும் அவற்றை முறி­ய­டித்து முன்­னே­று­வதே தமது குடும்பத் தைக் காப்­ப­தற்­கான சிறந்த வழி என்று உணர்ந்த ஜோவி­ய­னுக்கு நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் உப­கா­ரச் சம்ப­ளம் கிடைத்­துள்­ளது.

இந்த விருது பொறி­­­யி­­­யல் அல்லாத பிற துறைகளில் பயிலும் சிறந்த மாண­­­வர்­­­களை அங்­­­கீ­­­க­­­ரிக்­­­கிறது. தகுதி பெற்ற மாண­­­வர் ­­­களுக்கு உதவித் தொகையாக அவர்­­­களின் படிப்­­­பின் முழு செலவையும் நீ ஆன் பலதுறைத் தொழிற்­­­கல்­­­லூரி ஏற்­­­றுக்­­­கொள்­­­கிறது. முதல் ஆண்டில் பயிலும் மாண­­­வர்­­­களுக்கு வழங்கப்­­­படும் இந்த உப­­­கா­­­ரச் சம்ப­­­ளம், ஒவ்வோர் ஆண்டும் புதுப்­­­பிக்­­­கப்­­­படும். வார நாட்­களில் இரவு நேர விநி­யோ­கிப்­பா­ள­ரா­க­வும் வார இறு­தி­களில் மூக்­குக்­கண்­ணா­டிக் கடை ஒன்றில் விற்­பனை­யா­ள­ரா­க­வும் பணி­பு­ரிந்து குடும்பத்தைக் காப்­பாற்­றும் ஜோவியன், சில வேளை­களில் வகுப்­பு­களுக்­குச் செல்ல இய­லா­மல் போவதும் உண்டு. அத்­தகைய நேரங்களில் உடன் பயிலும் நண்­பர்­கள், ஆசி­ரி­யர்­களின் ஆத­ர­வினா­லும் உதவி­யா­லும் கல்­வி­யில் சிறந்து விளங்­கு­கிறார் ஜோவியன்.

பாடங்களைத் தவ­ற­வி­டும்­போது ஜோவி­ய­னுக்­காக ஆசி­ரி­யர்­கள் சிறப்பு வகுப்பு எடுப்­ப­து­டன் பாடக் குறிப்­பு­களை எடுத்­துத் தந்து நண்­பர்­களும் உத­வு­வ­தா­கச் சொன்னார் அவர். இளம் வயதிலேயே குடும்பத் தைக் கட்­டிக்­காத்து, கல்­வி­யி­லும் சிறந்து விளங்­கு­வதற்­கான உத்­வே­கத்­துக்கு 67 வயதான பாட்டியை முன்­னு­தா­ர­ண­மா­கக் கூறு­கிறார் ஜோவியன். மற்­ற­வ­ரின் உதவியை எதிர்­பார்க்­கா­மல் தைரி­ய­மாக, தனியாக வாழும் அவர் இப்­போ­தும் மாண­வர்­களுக்­குத் துணைப்­பாட வகுப்­பு­கள் எடுப்­பதைப் பெருமை­யா­கச் சுட்­டிக்­காட்­டிய ஜோவியன், சிர­மங்களைச் சந்­திக்­கும் வேளை யில் பாட்­டி­யி­டமே ஆலோசனை கோரு­வ­தா­கச் சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

இலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்

கடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

சீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்