பண்பாட்டை வளர்த்த கற்றல் விழா

மாணவர்களிடையே தமிழ் கலாசாரமும் மரபும் தொடர்ந்து ஆழமாகப் பதிய உதவியது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த தமிழ்மொழி கற்றல் விழா. மாணவர்கள், தன்னம்பிக்கை யோடு, பிழையின்றித் தமிழில் பேசுவதைப் பிரதானமாகக் கொண்டு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் நாடக உத்திகளைப் பயன்படுத்தியும், செயல்வடிவில் விழாவின் நிகழ்ச்சிகள் அமைந்தன.

“சிங்கப்பூர் சூழ்நிலையில், நமது மாணவர்கள் பெரும்பாலும் இருமொழிப்புழக்கம் கொண்டவர் களாக இருப்பதைக் காண முடிகின்றது. உலகமயமாதல் போன்ற தற்காலச் சூழ்நிலையில் இது நல்லது என்றாலும், நமது தமிழ் மாணவர்கள் தமிழைத் தொடர்ந்து சரிவரக் கற்று, தன்னம்பிக்கையோடு பயன் படுத்துபவர்களாக இருக்க வேண்டும். இது சிங்கப்பூரில் எதிர்காலத்தில் தமிழ்த் தொடர்ந்து வாழும் மொழியாக இருப்பதற்கு மிக முக்கியம்,” என்றார் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர், திரு.அன்பரசு இராஜேந்திரன்.

“மாணவர்களிடத்தில் தமிழ் மொழியைப் பயன்பாட்டு நிலையில் கொண்டு செல்லும்போதுதான், அங்கு ஒருவகையான ஈர்ப்பு ஏற்படுகின்றது. இந்த ஈர்ப்பு இன்றைய மாணவர்களிடத்தில் ஏற்படுவது மிக முக்கியம். இந்த ஈர்ப்பை நாம் ஏற்படுத்திவிட்டால், பெரும்பாலும், மாணவர்கள் தமிழ்ச் சார்ந்த தேடலில் சுயமாக அவர்கள் இம்மாதிரியான விழாக்களுக்குப் பிறகும் ஈடுபடுவதைக் காண முடிகின்றது. அந்தத் தேடலை ஏற்படுத்துவதே இந்தத் தமிழ்க் கற்றல் விழாவின் அடிப்படை நோக்கம்,” என்றார் அவர்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உள்ள கபடித் திடலில் ஆண் மாணவர்கள் ‘கபடி கபடி’ என்று மூச்சைப்பிடித்துக் கொண்டு, ஆர்வத்துடன் கபடி விளையாடினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திருநாவுக்கரசு வள்ளியம்மை

18 Nov 2019

பாடலும் என் பள்ளியும்

குமாரி சர்மிலி செல்வராஜி

18 Nov 2019

‘தடமாற்றங்களால் ஏற்படும் தடுமாற்றங்கள்’

‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
படங்கள்: ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ்

18 Nov 2019

பெண்ணியத்திற்காக குரலெழுப்பும் மாதர்