ஹவாயி தீவில் கடல்நீர் சறுக்கு சாகசம்

அமெரிக்காவின் ஹவாயி தீவுகளுக்குப் பயணம் செய்யவேண்டும் என்று கடந்த 16 ஆண்டுகளாக நான் கண்ட கனவு இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நனவானது. அங்கு 10 நாட்களை உறவினர்களோடு கழித்து அங்குள்ள இரண்டு தீவுகளை நான் சுற்றிப் பார்த்தேன். எரிமலைகளையும் கடற்கரைகளையும் கொண்ட அழகிய ஹவாயி தீவுகளுக்குப் பெரிய குழுவாகச் சென்றதால் எனக்கு பிடித்தமான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியவில்லை என்றாலும் குடும்பத் தினரோடு சேர்ந்து அங்கு சென்றதில் நான் மகிழ்ச்சி கொண்டேன்.

நெடுந்தூர நடைப்பயணம், கடல் சறுக்கு விளையாட்டு போன்ற சாகச நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டோம். நடுக்கடலில் ராட்சத ‘மெண்ட்டா’ திருக்கை மீன்களோடு நீந்தியது என்றுமே மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. சான் பிரான்ஸிஸ்கோ, லண்டன் போன்ற நகரங்களிலும் சில மணி நேரங்களைக் கழிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. - சுதாஸகி ராமன்

ஹவாயி தீவில் உறவினர்களுடன் சேர்ந்து கடல்நீர் சறுக்கு விளையாடத் தயாராகும் சுதாஸாகி ராமன் (இடது).

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

இலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்

கடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

சீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்