‘சைல்ட் எய்ட்’ நிகழ்ச்சியில் கித்தார் இசைத்துப் பாடிய நந்தினி

சுதாஸகி ராமன்

இந்திய, மேற்கத்திய பாரம்பரிய இசை பாணிகளில் முறைப்படி பயிற்சி பெற்றிருக்கும் 14 வயது நந்தினி குமார், நவீன 'பாப்' மேற்கத்திய இசை பாணியில் பாடவும் 'கித்தார்' இசைக்கருவியை இசைக்கவும் தாமாகவே கற்றுக் கொண்டார். அண்மையில் 'சைல்ட் எய்ட்' எனப்படும் வசதி குறைந்த சிறுவர்கள், இளையர்கள் ஆகி யோருக்கான நிதி திரட்டும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று தமது 'கித்தார்', பாடும் திறன்களை வெளிப்படுத்தினார். நந்தினியுடன் சிறுவர்கள், இளையர்கள் என்று 19 வயதுக்கு உட்பட்ட சுமார் 150 கலைஞர்கள் 'சைல்ட் எய்ட்' நிகழ்ச்சியைப் படைத்தனர்.

12ஆவது முறையாக இம்மாதம் நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் எஸ்பிஎச்சின் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்', 'பிசினஸ் டைம்ஸ்' நாளிதழ்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் நடைபெற்றது.

நந்தினி (வலது) கித்தாரை வாசிக்க, அவருடன் சேர்ந்து செ ஈ (Zhe Ee) 'யூக்குலேலி' இசைக்கருவியை இசைத்தார். அண்மையில் வெளியாகி பிரபலமடைந்த சில 'பாப்' இசைப் பாடல்களை 'சைல்ட் எய்ட்' நிகழ்ச்சியில் இருவரும் தொகுத்துப் பாடினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!