பன்முகத் திறன்களுடன் பரிமளிக்கும் அர்வின்

ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் சமையலறை உடையை அணிந்துகொண்டு விதவிதமாகச் சமைக்கத் தொடங்கிவிடுகிறார் 24 வயதான அலெக்ஸ் அர்வின் பிள்ளை. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால் ஆறு வயதிலிருந்தே சமையலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் அர்வின். தற்போது சமையல் மீதான அவரது ஈர்ப்பு தவிர்க்க இயலாததாகிவிட்டது. பெற்றோர் சமைப்பதைப் பார்த்து சிறு வயதில் தாமாகவே சமையல் கற்றுக் கொண்டதாகக் கூறிய அர்வின், பதினாறு வயதில் 'பேக்கிங்' கலையிலும் கால் பதித்தார். பெற்றோரும் அவருக்கு மிகுந்த ஆதரவு அளித்தனர்.

பள்ளி விடுமுறையின்போது பொழுதுபோக்காக 'பேக்கிங்' செய்வதில் ஈடுபட்ட இவர், தற்போது வித்தியாசமான வடிவங் களில், வண்ணமயமான, சுவை யான 'கேக்'குகள் செய்து வருகிறார். "சிறு வயதில் சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்க என் தந்தை உதவினார். என் தாயாரும் அக்காவும் உணவுகளின் தரத்தைச் சுவைத்துப் பார்ப்பதில் உதவினர்" என்றார் அர்வின். சமையல் தவிர மற்ற கலைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார் அர்வின். பாடுவது, நடனமாடுவது, ஓவியம் தீட்டுவது (இடது) போன்ற கலைகளிலும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளார், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் மின்சாரப் பொறியியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் அர்வின். கலைத்துறையில் பயிலும் மூத்த சகோதரியின் உதவியுடன் ஓவியம் வரையும் கலையைக் கற்றுக்கொண்டதாகச் சொன்னார் அவர்.

படங்கள்: அர்வின் செய்தி: யாஸ்மின் பேகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!